சுற்றி பார்க்க எங்க போறீங்களா இல்லையா..! ஏற்காட்டை பார்த்திடுங்கள்..!

Advertisement

ஏற்காடு பார்க்க வேண்டிய இடங்கள்

நண்பர்களே வணக்கம்.! பொதுவாக விடுமுறை காலம் என்றால் ஊட்டி கொடைக்கானல், போன்ற போல இடங்களுக்கு சென்று நிறைய இடங்களை சுற்றி பார்த்து இருப்பீர்கள். அதேபோல் ஏற்காடு பற்றி உங்களுக்கு தெரியுமா? அதேபோல் ஏற்காட்டை பற்றி சிறப்புகளையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டு  இது அடிவாரத்திலிருந்து 20 கிலோ மீட்டர், உயரம்  கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இயற்கையின் மறுபெயரான ஏற்காட்டை பற்றி தான் பார்க்க போகிறோம்.

Yercaud 5 Best Tourist Places in Tamil:

Emerald Lake

Emerald Lake இந்த ஏரி செயற்கையாக அமைந்த  ஏரி இல்லை இந்த ஏரியானது இயற்கையாக அமைந்தது. இந்த ஏரியை சுற்றி பார்க்க மிகவும் அழகாக இருக்கும். அதேபோல் அந்த ஏரிக்கு பக்கத்தில் நிறைய பூங்கா உள்ளது. அதேபோல் இந்த ஏரியில் படகு சவாரி செய்யவும் முடியும். படகு சவாரி செய்ய அதிக விலை  இல்லை மிகவும் குறைந்த விலை தான். அதேபோல் கோடைகாலத்தில் பூக்களை வைத்து நிறைய விதமான விலங்குகளை வடிவமைப்பார்கள் அதற்கான தேதியையும் வெளியிடுவார்கள்.

அண்ணாமலையார் கோவில்:

அண்ணாமலையார் கோவில்

இந்த கோவில் ஏற்காட்டில் சிறப்பு மிக்க இடமாக திகழ்கிறது. இந்த கோவில் ஒற்றை கோபுரத்தால் ஆனது, மேலும் இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதி அனைத்தும் கண்களை பறிக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

Pagoda Point Yercaud in Tamil:

Pagoda Point Yercaud in Tamil

இந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்  ஏன் இந்த இடத்திற்கு Pagoda Point என்று பெயர் வந்து என்று தெரிந்துகொள்வோம் வாங்க. Pogoda என்றால் கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடிக்கி வைத்திருப்பார்கள். அதை வந்து ஒரு பெரிய பிரமிடுகள் போன்று கட்டப்பட்டிருப்பார்கள். ஆகையால் தான் அதனை Pogoda point என்று அழைக்கப்டுகிறது. அதேபோல் இது சிறப்பு வாய்ந்த இடமாகவும் சொல்ல முடியும் ஏன் என்றால் இங்கு சிறந்த view point-களும் உள்ளது. அதிகமான மேகங்களை பார்க்க முடியும். இங்கு இருந்து சேலம் மாநகரம் முழுவதையும் தெளிவாக பார்க்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

கரடிகளில் குகை:

கரடிகளில் குகை

இந்த இடத்திற்கு ஏன் இது மாதிரியான பெயர் வந்தது என்றால் முன்பு இந்த குகையில் கரடிகள் வாழ்ந்து வந்தது என்பதனால் இதற்கு பெயர் கரடி குகை என்று சொல்லப்படுகிறது. இந்த குகையை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த குகை தரையிலிருந்து 7 அடிக்கி கீழ் அமைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இன்னும் ஆழமாகவும் செல்கிறது என்றும் சொல்கிறார்கள்.

கிளியூர் அருவி ஏற்காடு:

கிளியூர் அருவி ஏற்காடு

இந்த அருவியின் உயரம் எவ்வளவு என்றால் 300 அடி ஆகும். இந்த நீர் விழிச்சியில் குளிக்க வேண்டும் என்றா சுமார் 250 படிக்கட்டுகளை தாண்டி இறங்க வேண்டும். நீங்கள் இறங்கும் போது அங்கு நிறைய விதமான இயற்கையை ரசிக்கலாம். அங்கு நிறைய குருவிகளை கண்டு மகிழலாம். குளித்து விட்டு மேல் வந்த பிறகு கண்டிப்பாக பசிக்கு அங்கயே நிறைய ஹோட்டல் இருக்கிறது. எனவே இந்த இடத்தை சுற்றி பார்த்துவிட்டுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளலாம் 👉👉 கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்கள்

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide

 

Advertisement