திருச்சியில் பார்க்க வேண்டிய இடங்கள் | Tiruchirappalli Tourist Places in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. கண்டிப்பாக பலர் வருடத்திற்கு ஒரு முறையாவது எங்காவது சுற்றுலா சென்று வர வேண்டும் என்று திட்டமிடுவார்கள்.. அப்படி நீங்கள் திட்டமிட்ட இடங்களில் திருச்சியும் உள்ளதா.. அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.. ஆம் நண்பர்களே திருச்சியில் உள்ள சுற்றலா தளங்களை பற்றி தான் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். தமிழ்நாட்டின் நான்காவது மாநகராட்சியாக கருதப்படுவது இந்த திருச்சி தான். திருச்சி தமிழ்நாட்டின் கல்வி மற்றும் தொழில் நகரமாக விழுகிறது, இந்த நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சரி வாங்க திருச்சியில் பார்க்க வேண்டிய இடங்கள் (Trichy Tourist Places in Tamil) என்னென்ன உள்ளது என்று பார்ப்போம்.
Trichy Tourist Places in Tamil
வண்ணத்துப்பூச்சி பூங்கா – Trichy Butterfly Park:
காவேரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையில் இயற்கையாக அமைந்திருக்கும் தீவுப்பகுதியான ஸ்ரீரங்கம் பக்கத்தில் உள்ள மேலூரில் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. வனத்துறை பரம்பரிக்கப்பட்டு ஆசியாவிலேயே மிக பெரிய பூங்காவாக இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா அழைக்கப்படுகிறது.
திருச்சி மலைக் கோட்டை:
Trichy Tourist Places in Tamil – இந்த மலைக் கோட்டை கோயில் என்பது ஒரு தொல்பழங்கால மலைப்பாறை மீது கட்டப்பட்ட கோட்டை ஆகும். இந்த கோட்டை கோவில்களை கொண்ட ஒரு தொகுதியாக பார்க்கப்படுகிறது. நடுவில் ஒரு மலையும் அதனை சுற்றி கோட்டை அமைந்திருப்பதால் இதனை மலைக்கோட்டை என்று அழைக்கின்றன. இந்த மலைக்கோட்டை கோயிலுக்கு வெளியூர்களில் உள்ள மக்கள் அதிகம் வருகை தருகின்றன. ஆக இதுவும் திருச்சியின் ஒரு சுற்றுல தலமாக பார்க்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்:
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இதுவும் சுற்றுலா தலங்களில் இடம்பெற்றுள்ள ஒரு கோயில் ஆகும். இந்த கோயிலில் உள்ள கோபுரத்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இது ஒரு வைணவ கோவில் ஆகும். ரங்கநாதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீமகா விஷ்ணுவிற்காக கட்டப்பட்ட கோயில் ஆகும். 108 திவ்விய தேசங்களில் மிக முக்கியமான தலமாக கருதப்படுகிறது. இந்த மகா விஷ்ணுவை சந்திக்க தமிழ் நாட்டில் உள்ள மக்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள மக்களும் வருகை தருகின்றன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தல வரலாறு..! |
ஜம்புகேஷ்வர் கோயில்:
திருச்சிக்கு அருகில் அமைத்துள்ள மிக பெரிய சிவன் கோயிலாக இந்த ஜம்புகேஷ்வர் கோயில் அழைக்கப்படுகிறது. பஞ்ச பூதங்கள் தலங்களில் இந்த தலம் நீருக்குரிய தலமாக கருதப்படுகிறது. இந்த தலத்திற்கும் அதிக அளவிலான மக்கள் வருகை தருகின்றன.
எறும்பீஸ்வரர்:
திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் 13 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைத்துள்ளது. ஒரு சிறிய குன்றின் மீது இந்த கோயில் அமைந்துள்ளது. இந்திரர்களும், தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு வழிபட்ட தலம் என்று ஒரு சிறப்பு நம்பிக்கை இந்த கோயிலுக்கு உள்ளது.
வயலூர் முருகன் கோயில்:
இந்த வயலூர் முருகன் கோயில் திருச்சியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருமண தடை நீங்க இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை தருகின்றன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
கல்லணை:
உலக பழமை வாய்ந்த அணைகளில் ஒன்று தான் இந்த கல்லணை. இந்த கல்லணை திருச்சியில் அமைத்துள்ளது. இது காவேரி மீது கட்டப்பட்டுள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவேரி முகப்பில் இரண்டாக பிரிக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் கல்லணை.
ராணி மங்கம்மாள் கொலு மண்டபம்:
இந்த ராணி மங்கம்மாள் கொலு மண்டபம் கிபி 1700-யில் நாயக்கர் அரசியான ராணி மங்கம்மாவால் திருச்சியில் கட்டப்பட்டுள்ளது. மங்கம்மாள் கணவரான சுகநாதர் நாயக்கரால் 1666-யில் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக சொல்லப்படுகிறது. தற்பொழுது இந்த மண்டபத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்..!
புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி:
தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலை என்று கருதப்படுகிற கொல்லிமலை பள்ளத்தாக்கில் இந்த புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி அமைத்துள்ளது. இது திருச்சியில் இருந்து சுமார் 72 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |