Ariyalur District Tourist Places in Tamil
பொதுவாக சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் குற்றாலம் போன்ற இடங்கள் தான் முதலில் நினைவிற்கு வரும். ஆனால் இவற்றை தவிர வேறு சில சிறப்பான சுற்றுலா தலங்களும் உள்ளன. அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம்.
அந்த வகையில் இன்றைய பதிவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அடுத்த முறை நீங்கள் அரியலூருக்கு சென்றால் இந்த பதிவில் கூறியுள்ள சுற்றுலா தலங்களுக்கெல்லாம் சென்று வாருங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=>திருவள்ளூர் மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா..? இது தெரியாம போச்சு..!
Ariyalur District Tourist Places in Tamil:
சிமெண்ட் நகரம் என்று அழைக்கப்படும் அரியலூர் மாவட்டம் 2007-ஆம் ஆண்டு நவம்பர் 23 தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இங்கு பல பிரபலமான சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளது.
மேலும் இம்மாவட்டம் ஆசியாவிலேயே அதிக அளவு சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் பல சிறப்புகளை தனக்குள் கொண்டுள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி விரிவாக காணலாம்.
1. கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில்:
நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் தான். இந்த கோவில் அரியலூரிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ளது.
இந்த கோவில் முதலாம் இராஜேந்திர சோழனால் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் 2004-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படித்துப்பாருங்கள்=>தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் ..!
மேலும் இக்கோவில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் அரியலூருக்கு சென்றால் இந்த கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
2. கலியுகவரதராஜப் பெருமாள் கோவில்:
நாம் இரண்டாவதாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் கலியுகவரதராஜப் பெருமாள் கோவில் தான். இந்த கோவில் அரியலூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
இக்கோவில் 250 ஆண்டுகள் பழமையான கோவில். மேலும் இக்கோவில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. எனவே அடுத்தமுறை நீங்கள் அரியலூருக்கு சென்றால் இந்த கலியுகவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
3. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தான். இந்த பறவைகள் சரணாலயம் அரியலூரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரைவெட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் ஆகும். மேலும் இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. பல்வேறு வகையான பறவைகளை கண்டு மகிழவேண்டும் என்றால் இந்த கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு சென்று வாருங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்..!
4. கீழப்பழுவூர் புதைபடிவ அருங்காட்சியகம்:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் கீழப்பழுவூர் புதைபடிவ அருங்காட்சியகம் தான். இந்த அருங்காட்சியகம் அரியலூரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழப்பழுவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த புதைபடிவங்களை காண வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள், இந்த கீழப்பழுவூர் புதைபடிவ அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்.
5. அணைக்கரை அணை
அடுத்து நாம் பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் அணைக்கரை அணை தான். இந்த அணை அரியலூரிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கரை என்னும் இடத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
மேலும் இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் அரியலூருக்கு சென்றால் இந்த அணைக்கரை அணைக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள்=> திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா..!
6. பெலாந்துறை அணை:
அடுத்து நாம் இறுதியாக பார்க்க இருக்கும் சுற்றுலா தலம் எதுவென்றால் பெலாந்துறை அணை தான். இந்த அணை அரியலூரிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
மேலும் இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் அரியலூருக்கு சென்றால் இந்த பெலாந்துறை அணைக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.
இதையும் படியுங்கள்=> இயற்கையின் மிகவும் அழகான மற்றும் அதிசயமான 7 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |