கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்கள்

Tourist Places in Kerala in Tamil

கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்கள் | Tourist Places in Kerala in Tamil

சுற்றுலாவின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் கேரளாவை பற்றி தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க உள்ளோம். கேரளா மாநிலம் ஒரு பக்கம் அழகான இயற்கை காட்சி நிறைந்து மேற்கு தொடர்ச்சி மலைகளையும், மற்றொரு பக்கம் அரபி கடலால் சூழப்பட்ட மேற்கு கடற்கரைகள் அமைந்துள்ளது. இந்த கேரளாவில் பார்க்கவேண்டிய சுற்றுலா தலங்கள் நிறையவே இருக்கிறது. இருப்பினும் கேரளாவில் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம். நீங்கள் கேரளாவிற்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க கேரளாவில் பார்க்க வேண்டிய பத்து சுற்றுலா தலங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

அலப்பி கேரளா – Backwater of Kerala:

back water of kerala

கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்களில் முதலாவது இருப்பது அலப்பி தான். இங்கு படகு வீடு (Boat House) மிகவும் அழகாக இருக்கும். படகில் சென்று இயற்கை காட்சிகளை ரசிக உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் தாராளமாக இந்த Backwater-க்கு செல்லலாம். இது தவிர அலப்பியில் சுற்றி பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது. குறிப்பாக ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் படகு போட்டி மிகவும் சிறப்பாக இருக்கும். கேரளாவிற்கு சுற்றுலா செய்வதாக இருந்தால் இந்த இடத்திற்கும் சென்று வாருங்கள். மிகவும் நிம்மதியான சுற்றுலாவாக இந்த இடம் இருக்கும். அலப்பிக்கு செல்ல வேண்டும் என்றால் செப்டம்பர் முதல் மே மாதங்கள் மிகவும் நன்றாக இருக்கும்.

மூணார்:

கேரளாவில் மிகவும் அழகான மலை சுற்றுலா தலம் எதுவென்றால் அதனை மூணார் என்று சொல்லலாம். மூணார் பொறுத்தவரை மேட்டுப்பட்டி டேம், குண்டல டேம், தேயிலை அருங்காட்சியகம் இது போன்று பலவகையான சுற்றுலா இடங்கள் இருக்கிறது.

கோவளம் கடற்கரை:

கேரளாவில் இருக்கும் கடற்கரை சுற்றுலா தலங்களிலேயே இந்த கோவளம் கடற்கரை தான் மிகவும் அழகான இடமாக கருதப்படுகிறித்து. உங்களுக்கு கடற்கரைக்கு  செல்ல மிகவும் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த கோவளம் கடற்கரையை தேர்வு செய்யலாம். செப்டம்பர் முதல் மே மாதங்கள் இந்த இடத்திற்கு சுற்றுலா வருவது மிகவும் நன்றாக இருக்கும்.

கொச்சின்:

வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் இதனையெல்லாம் அறியவிரும்புபவர்கள்  இந்த கொச்சினை தேர்வு செய்யலாம். கேரளாவிற்கு அதிக மக்கள் சுற்றுலா வரும் இடம் இந்த கொச்சின் தான். கொச்சினில் அரண்மனைகள், ஆலையங்கள், கோட்டைகள் என்று நிறைய வகையான சுற்றுலா தலங்கள் இந்த கொஞ்சினாள் உள்ளது.

தேக்கடி:

கேரளாவில் வனம் சார்ந்த சுற்றுலா தலங்களை நீங்கள் காண விரும்புகிறீர்கள் என்றால் இந்த தேக்கடியை நீங்கள் தேர்வு செய்யலாம். இது ஒரு வனம் பகுதியாகும். இதனை புலிகள் சரணாலயம் என்று அழைப்பார்களாம். அங்கு இருக்கும் ஏரிகளில் படகு சவாரியும் செல்லலாம், இது போன்ற நிறைய விஷயங்கள் இந்த தேக்கடியில் உள்ளது.

வயநாடு:

கேரளாவை கடவு தேசம் என்று அழைப்பதற்கு இந்த வயநாடும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்த வயநாட்டிலும் பலவகையான பசுமை நிறைந்த சுற்றுலா தலங்கள் உள்ளது. எடைகள் குகை, வான சூரா சாகர் அணை, வனவிலங்குகள் சரணாலயம், நீர்வீழ்ச்சிகள் என்று பலவகையான சுற்றுலா தலங்கள் உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

திரிச்சூர்:

இந்த திரிச்சூரை கலாச்சார தலைநகர் அன்று அழைக்கின்றன. இந்த திரிச்சூரில் பல வகையான கோவில்கள், தேவலையங்கள் என்று நிறைய இருக்கின்றதாம். இந்த ஊரில் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் பாரம்பரியமாக இருக்கும், அதன் பிறகு இங்கு மிருகக்காட்சி சாலை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்று ஏராளமான சுற்றுலா தலங்கள் இந்த திரிச்சூரில் உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவின் தலைநகரமாக விளங்கப்படுவது இந்த திருவனந்தபுரம் தான். இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் அழகான மற்றும் பசுமையான சுற்றுலா தலமாக இந்த திருவனந்தபுரம் அழைக்கப்படுகிறது. பனைமரம் மற்றும் தென்னை மரம் சூழ்ந்த கடற்கரையை இந்த திருவனந்தபுரத்தில் காணமுடியும். இந்த திருவனந்தபுரத்தில் சுற்றி பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கிறது.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉Travel Guide