Kudiyarasu Dhinam Varalaru
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குடியரசு தின வரலாறு பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஜனவரி மாதம் என்றாலே நம்முடைய எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பொங்கல் பண்டிகையும், குடியரசு தினம் தான். பொங்கல் விழாவினை எவ்வளவு சிறப்பாக கொண்டாடுகிறோமா அதேபோன்று நம் தாய் நாடு சுதந்திரம் அடைந்த தினத்தையும் சிறப்பாக கொண்டாட வேண்டும் அல்லவா..! இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை 1950 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் 26 ஆம் நாள் அமல்படுத்தப்பட்டன.
அந்த சிறப்பு மிகுந்த நாளை கௌரவிக்கும் வகையில் 1950 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவாி மாதம் 26 ஆம் நாள் அன்று நாம் இந்திய குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம். வருகிற ஜனவரி 26 அன்று 73-ம் குடியரசு தினத்தை கொண்டாட பல சிறப்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பதிவில் குடியரசு தின வரலாற்றினை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
Kudiyarasu Dhinam History in tamil:
சுதந்திர இந்தியாவின் வரலாறு:
உலக பரப்பளவில் இந்திய நாடானது ஏழாவது இடத்தில் அமைந்துள்ளது. 130 கோடி கணக்கான மக்கள் தொகையை கொண்டு உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்திய நாடானது ஆகஸ்ட் 15 அன்று முழு சுதந்திரம் அடைந்தது. இந்து சமயம், புத்தம், சமணம் மற்றும் சீக்கியம் போன்ற நான்கு மதங்களும் நம் இந்திய நாட்டிலையே முதன் முதலில் தோன்றியது.
குடியரசு தினத்தின் சிறப்பு:
இந்திய நாட்டின் தேசிய கொடியில் மலர்களை பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டிய பிறகு விழாவின் போது கொடி கயிற்றினை கீழே இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அந்த நாளினை கொண்டாடுவார்கள்.
உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இரு முறை கொடியேற்றி கொண்டாடுகிறோம். இந்திய தலைநகரில் நாட்டினுடைய ஆயுத பலத்தை காட்டும் வகையில் படை அணிவகுப்பு நடைபெறும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம்:
இந்திய நாடு விடுதலை அடைந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு அறிஞர் அம்பேத்கர் தலைமையில் சுதந்திர இந்தியாவிற்கான நிலையான அரசியல் அமைப்பு சட்டங்களை உருவாக்கும் வரைவுக்குழு ஏற்படுத்தப்பட்டது. வரைவுக் குழு உருவாக்கிய சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் அமைப்புச் சட்டங்கள் தீர ஆராய்ச்சி செய்யப்பட்டு, 1950-ஆம் ஆண்டு ஜனவாி 26 அன்று அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் இந்தியா ஒரு விடுதலை அடைந்த இறையாண்மை கொண்ட குடியரசு என்று அறிவிக்கப்பட்டது.
மூவர்ண கொடியின் சிறப்பு |
முதல் குடியரசு தலைவர்:
ராஜேந்திர பிரசாத் அவர்கள் தான் இந்திய ஒன்றியத்தின் முதல் குடியரசு தலைவராக இருந்தவர். ஜனவரி 26 இந்தியர்களாகிய அனைவருக்கும் மிகவும் முக்கியமான நாளாக இருந்தது. அன்றைய தினத்தில் தான் 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் உருவாக்கப்பட்ட அடிமை இந்திய சட்டங்கள் களைக்கப்பட்டு இந்தியா்களால் உருவாக்கப்பட்ட விடுதலை பெற்ற புதிய இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
விழாக்கள்:
குடியரசு தினத்தன்று சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கான விருதுகள், பாராட்டுக்கள் பதக்கம் போன்றவை வழங்கப்படும். அன்றைய தினத்தில் பள்ளிகளில் மாணவர்கள் ஆடையில் தேசிய கொடியை அணிந்து இனிப்புகளை பரிமாறிக்கொள்வார்கள். இந்த வருடம் இந்திய நாடானது தனது 73-வது குடியரசு தினத்தை கொண்டாடவிருக்கிறது. இந்த குடியரசு தினத்தில் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்..
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |