கூகுளை கண்டுபிடித்தவர் யார்? | History of Google in Tamil
நம்முடைய அன்றாட பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும் நவீன தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையில் இன்றியமையாததாக உள்ளது. அப்படி மக்களின் தேவைக்காக உருவாக்கபட்டவை தான் கூகுள், Chrome, Firefox போன்றவை. இவற்றில் மக்கள் அதிகமாக பயன்படுத்துவது கூகுள் தான். இந்த கூகுளுக்கு தெரியாத விஷயங்கள் என்று எதுவுமே இல்லை, பாடம் சொல்லி தரும் ஆசிரியரை போல அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளது, சில நேரங்களில் ஆசிரியருக்கு தெரியாத செய்திகளை கூட தெரிந்து வைத்துள்ளது. உலகத்தை உங்கள் விரல் நுனியில் காமிக்கும் சக்தியை இந்த கூகுள் கொண்டுள்ளது என்றே சொல்லலாம். இப்படி அனைத்து வகையிலும் பயன்படும் கூகுளின் வரலாறை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தோன்றிய வருடம்:
- கூகுள் வரலாறு: தொடங்கப்பட்ட இடம் மென்லோ பார்க், கலிபோர்னியா, செப்டம்பர் 7-ம் தேதி 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுந்தர் பிச்சை என்பவர் கூகுளின் CEO ஆவார்.
- கூகுள் 1998-ம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் என்ற இரண்டு கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்டது. இணையத்தளங்களை தரவரிசைப்படுத்தும் தளமாக இதை உருவாக்க விரும்பினர்.
- இதில் 24,400 பணியாளர்கள் உள்ளனர்.
பெயர் காரணம்:
- Google History in Tamil: கூகுள் என்ற சொல் கூகோல் என்ற சொல்லில் இருந்து வந்தது. முதலில் Googol என்று தான் பெயர் வைக்க நினைத்துள்ளனர். ஆனால், லாரி பேஜ் அதன் எழுத்தை தவறாக எழுதியதால் ‘Google’ என வைத்து விட்டனர். இந்த பெயர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.
கூகுளின் நோக்கம்:
- History of Google in Tamil: கூகுளின் முக்கிய நோக்கமே மக்களுக்கு தேவைப்படும் அனைத்து நல்ல தகவல்களும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் எந்த விதமான கெடுதல்களையும் தரக்கூடாது என்பதே ஆகும்.
தலைமையகம்:
- கூகுள் வரலாறு: இதன் தலைமையகம் மவுன்டன் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது. இந்த உலகில் உள்ள மக்கள் அதிகமாக பயன்படுத்தும் தளமாக கூகுள் உள்ளது. ஒவ்வொரு நாளும் கூகுளில் 15% தேடல்கள் தேடப்படுகின்றன.
வளர்ச்சி:
- கூகுள் வரலாறு: ஹோம்பேஜ் குறைந்தபட்சம் 80 மொழிகளில் வழங்கப்படுகிறது. ஹெளசா, இக்போ, வொருபா, சோமாலி, ஸூலு, மங்கோலியன், நேபாளி, பஞ்சாபி, மெளரி போன்ற மொழிகள் அதன் சமீபத்திய இணைப்புகள்.
- இந்த கூகுளின் அபார வளர்ச்சி காரணமாக அதனுடைய சேவையை உயர்த்த நினைத்தது. அதன் காரணமாக உருவானவையே கூகுள் மெயில், Documents, கூகுள் குரோம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூடியூப் போன்றவை உருவாகின.
- கூகுளின் ஒரு பகுதியாக 2006-ம் ஆண்டு யூடியூப் தோன்றியது.
- அலெக்சா டாட் காம் எனும் நிறுவனம் அதிகமான பயனர்களை கொண்ட தளமாக கூகுள் உள்ளது என்று கூறியுள்ளது.
நன்மைகள்:
- History of Google in Tamil: கூகுள் மூலம் மக்களுக்கு பல விஷயங்கள் தெரிய வருகிறது. உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், சினிமா விவரங்கள், குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக புத்தக விடைகள், விளையாட்டுகள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்பட்டு வருகிறது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |