தமிழ் புத்தாண்டு உருவான வரலாறு | Tamil Puthandu Varalaru
வரலாறு என்ற சொல்லிற்கு வந்த வழி என்று பொருள். அதாவது இதுவரை அல்லது இதற்கு முன் நடந்த நிகழ்வுகளை குறிப்பது, கடந்து வந்த பாதைகளை நினைவில் வைத்து கொள்வதே வரலாறு ஆகும். ஒரு மொழி, நாட்டு மக்களின் கலை, பண்பாடு, அறிவியல், சமூகம் போன்ற கடந்த கால பதிவுகள் தான் வரலாறு எனப்படும். அந்த வகையில் தமிழ் மக்களின் பாரம்பரிய முறையில் எப்போதும் தனித்துவமாக இருக்கும் தமிழ் புத்தாண்டு உருவான வரலாறை தெரிந்து கொள்வோம் வாங்க.
தமிழ் புத்தாண்டு வரலாறு:
- Tamil New Year History in Tamil: சூரியனை அடிப்படையாக வைத்து தங்களின் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர் தமிழர்கள்.
- ஒரு வருடத்தில் மொத்தம் 12 மாதங்கள், அதனை அடிப்படையாக கொண்டு சித்திரை மாதமே தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமாக உள்ளது. தமிழ் வருடத்தின் கால அளவு எப்பொழுதும் சீரானதாகவே உள்ளது.
- அறிவியல் ரீதியாக சூரியன் பூமியை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகிறது. இதை வைத்து தான் தமிழ் வருடத்தின் கால அளவும் பின்பற்றப்படுகிறது.
- சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடத்தின் தொடக்க ஆண்டு என்றும், மீன ராசியிலிருந்து வெளிவருவதை இறுதி ஆண்டு என வைத்து தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுகிறது. பெரும்பாலும் தமிழ் வருடப்பிறப்பு ஏப்ரல் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தான் வரும்.
சான்றுகள்:
- Tamil New Year History in Tamil: இதற்கு முன்னர் தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள் என்பதற்கான சான்று சரிவர கிடைக்கவில்லை. கடந்த காலத்தில் ஆவணி மாதத்தை ஆண்டின் தொடக்கமாக கருதி கொண்டாடி இருக்கலாம் என்று ஒரு சில சான்றுகள் கூறுகின்றன.
- தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ஆவணி முதல் மாதம் என்று குறிப்பிடுகிறார், ஆனால் அந்த மாதம் பண்டிகைகள் கொண்டாடப்பட்டது என்பதற்கான சான்று எதுவும் இல்லை.
- ஆனால் சித்திரை மாதம் தான் முதல் மாதம் என்பதை நெடுநல்வாடை, பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி போன்ற நூல்கள் எடுத்து கூறுகின்றன.
மலைபடுகடாம் என்ற நூலில் “தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும்,
பழமொழி நானூறு “கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என்றும்
- பாடுவதால் சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக கருதப்படுகிறது. சிலப்பதிகார காலத்திலிருந்து இன்று வரை தமிழர் அனைவரும் சித்திரைத் திருநாளை வருடப்பிறப்பாக சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
- 1921, 1970, 1980 மற்றும் 2008 போன்ற ஆண்டுகளில் தை மாதம் தான் தமிழ் புத்தாண்டு என்ற சர்ச்சை இருந்தது.
- பின்னர் 2011-ம் ஆண்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசின் மூலம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.
பாரம்பரியம்:
- தமிழ் புத்தாண்டு அன்று மக்கள் வீட்டை சுத்தம் செய்து, நீராடி, வாசலில் கோலமிட்டு புத்தாடை அணிந்து பெரியோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, கோவிலுக்கு செல்வார்கள். வீட்டில் செய்த உணவுகளை மற்றவர்களுக்கு பரிமாறி அதில் மகிழ்ச்சி காண்பார்கள்.
தமிழ் புத்தாண்டை கொண்டாடும் நாடுகள்:
- இந்த புத்தாண்டை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழர்கள் வாழும் இடங்களில் கொண்டாடுகிறார்கள்.
- இலங்கையில் போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், கிளித்தட்டு, ஊஞ்சல் ஆடுதல், மகுடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் ஆகும்.
யுகாதி பண்டிகை வரலாறு |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |