வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

போகி பண்டிகை வரலாறு | Bhogi Pongal History in Tamil | போகிப் பண்டிகையின் சிறப்பு

Updated On: January 13, 2026 4:27 PM
Follow Us:
Bhogi Pongal History in Tamil
---Advertisement---
Advertisement

போகி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது? | Pogi Pandigai Varalaru Tamil | Pogi Pandigai

பொதுவாக நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. அதிலும் தமிழர் பண்டிகையான பொங்கல் மிகவும் சிறப்புக்குரியது. இதில் வரும் முதல்வதாக வரும் போகி பண்டிகையின் சிறப்புகளை பற்றி அறிந்து கொள்வோம். போகி பண்டிகையானது பொங்கல் திருநாளுக்கும் முதல் நாள் கொண்டாடப்படும் சிறப்பான நாளாகும். போகி பண்டிகை நாளானது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து கொண்டாடுவார்கள். அன்றைய தினத்தில் பழைய பொருட்களை மட்டுமல்லாமல் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் தூக்கிய எரிய வேண்டும் என்பதே போகி பண்டிகையின் சிறப்பாகும். இந்த பதிவில் போகி பண்டிகையின் வரலாற்றினை பற்றி ஒரு சிறப்பு தொகுப்பு காணலாம் வாங்க..

போகி பொங்கல் வாழ்த்துக்கள்

போகிப் பண்டிகை சிறப்பு:

போகி பண்டிகையின் விடியற்காலையில் எழுந்து நீராடிவிட்டு வீட்டில் இருக்கக்கூடிய பழைய பொருட்களை எல்லாம் ஒன்று திரட்டி எரித்து கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினத்தில் கொட்டு எனப்படும் போகி மோளம் அடித்து கொண்டாடி மகிழ்வார்கள்.

பொங்கலுக்கு முதல் நாள் வீட்டிற்கு வண்ணமடித்து வீட்டை முழுவதும் தூய்மைப்படுத்தி வீட்டை அலங்கரிப்பார்கள். பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது:

போகம் என்றால் மகிழ்ச்சி, இன்பத்தை குறிக்கிறது. போகம் என்ற சொல்லிற்கு அதிபதியாக விளங்குபவர் இந்திர பகவான். விவசாய மக்களுக்கு விவசாயம் செய்யும் நேரத்தில் மழையை பொழிகின்ற இந்திர பகவானை சிறப்பிக்கும் விதமாக போகி பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாள் கட்டுரை

இந்திரனின் ஆனவன் குணம்:

தான் மழை பொழிவதால் மட்டுமே விவசாயம் செழிப்பாக இருக்கிறது என்ற கர்வத்தால் இந்திரனுடைய ஆணவத்தை குறைக்க கோகுல கிருஷ்ணன் இந்திரனின் வழிபாட்டை தடுத்து கோவர்த்தன மலைக்கு வழிபாடுகள் செய்வதற்கு மக்களை திசை திரும்பிவிட்டார். இதனை கண்ட கோபம் அடைந்த இந்திரன் ஏழு நாட்கள் விடாமல் பெருமழை பொழிய செய்து மக்களை துன்புறுத்தினான்.

மக்களை காத்த கிருஷ்ணர்:

மக்களை துன்பத்திலிருந்து பாதுகாக்க கோவர்த்தன மலையை குடை போன்று தன்னுடைய ஒற்றை விரலால் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினார். ஆணவத்தை துறந்த இந்திரன் கிருஷ்ணரை பணியவே கிருஷ்ணர் போகி பண்டிகை அன்று இந்திர விழாவை கொண்டாட வரம் கொடுத்தார்.

இந்திரன் மட்டுமல்லாமது சுக்கிர பகவானும் போகத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும்பொழுது அவன் மிகவும் வசதி வாய்ப்புடன் இருக்கிறான். தேவையற்ற, வீணான, பழைய ஆகிய சொற்களுக்கு முதன்மை பெற்றுள்ளவர் சனீஸ்வர பகவான்.

போகிப் பண்டிகையின் சிறப்பு:

 போகி பண்டிகை வரலாறு

போகி பண்டிகை அன்று வீட்டில் இருக்கக்கூடிய தேவையில்லாத பொருட்களையெல்லாம் எரித்து, அன்றைய தினத்தில் சனி பகவானின் அருளை பெற்று இந்த வருடம் நல்ல பொலிவுடன் அமைந்து புதிய பானையில் இனிப்பான சர்க்கரை பொங்கல் படைத்து சுக்கிர பகவானின் அருளையும் பெற்றுக் கொண்டு, பழைய பிரச்சனைகள் அனைத்தும் விலகி புதிய பாதை நோக்கி வழிப்படுவதே போகி மற்றும் பொங்கல் பண்டிகையின் சிறப்பாகும். இந்த போகி பண்டிகையை அனைவருடனும் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்..

மேலும் இது போன்ற வரலாற்றை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  Varalaru
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now