தேசிய கல்வி நாள் | அபுல் கலாம் ஆசாத் வாழ்க்கை வரலாறு

Advertisement

அபுல் கலாம் ஆசாத் பற்றிய குறிப்பு 

கல்வி, ஒரு தனி மனிதனை முன்னேற்றுவது மட்டும் அல்ல, அவனின் குடும்பம், கிராமம், சமூகம் மற்றும் நாட்டையும் முன்னேற்றும். அத்தகைய கல்வி அனைவருக்கும் கிடைக்க கூடிய வகையில் உருவாக்கிய புகழ், நம் நாட்டின் முன்னோடிகளையே சாரும். இந்த தீபகற்ப இந்தியாவை நாம் பெருமைப்படக்கூடிய ஒரு நாடாக வடிவமைக்க உதவிய கடந்த கால ஹீரோக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் கல்விக்கு வித்திட்டவர்கள் சிலர்.

அவர்களில், மௌலானா ஆசாத் என்று பரவலாக அறியப்பட்ட இவரை, அபுல் கலாம் ஆசாத் என்று அன்புடன் அழைப்பார்கள். சயீத் குலாம் முஹியுதீன் அஹ்மத் பின் கைருதீன் அல் ஹுசைனி  என்ற இயற்பெயரை கொண்ட இவர். இந்திய திரு நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 11 செப்டம்பர் 2008 ஆம்  ஆண்டு இந்திய அரசின் மனித மேம்பாட்டுத் துறை, அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை தேசிய கல்வி தினமாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க ஒருவரான அபுல் கலாம் ஆசாத் பற்றிய வரலாற்றை விரிவாக தெரிந்துகொள்ளவோம்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு

மௌலானா ஆசாத் வாழ்க்கை குறிப்பு:

Maulana Abul Kalam Azad biography: அபுல் கலாம் ஆசாத், 1988 நவம்பர் 11 அன்று மெக்காவில் பிறந்தார். அப்போது மெக்கா, ஓட்டோமன் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது. ஆசாத்தின் தந்தை ஆப்கானின் வம்சாவளியை சேர்ந்த ஒரு அறிஞர் அவர். ஆசாத் தந்தை தனது தாய்வழி தாத்தா வீட்டில் டெல்லியில் தங்கி இருந்தார். இந்தியாவில் கிளர்ச்சி தொடங்கிய கால கட்டத்தில் இவர்கள் குடும்பம் மெக்காவுக்கு குடியேறியது. ஆசாத் தந்தை இறப்பிற்க்கு பிறகு அவர்கள் குடும்பம் 1890-ல்  கொல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்தனர்.

ஆசாத் தந்தை பல புத்தகங்களை எழுதி புகழ் பெற்றவர். ஆசாத் தனது சிறுவயதில்  ஏற்பட்ட தாக்கத்தால் இந்திய விடுதலை இயக்கத்தில் முதன்மையானவர் ஆனார். ஆசாத் என்பது இவர் தனக்கு சூட்டிக்கொண்ட புனை பெயர் ஆகும். ஆசாத் என்பதன் அர்த்தம் விடுதலை ஆகும். 1923-ல் இந்திய தேசிய காங்கிரசின் 38-வது தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் 

வங்காள மொழி, உருது, பாரசீகம், அரபு மற்றும் இந்திய தேசிய மொழிகள் போன்ற பல மொழிகள் அறிந்த இந்திய முஸ்லீம் அறிஞர் ஆவர். இந்திய பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தவர். இந்து முஸ்லீம் ஒற்றுமை வலியுறுத்தியவர். சுதந்திர இந்தியாவின் கல்வி அமைச்சரான இவர் அன்றைய கல்வி துறைக்கு சரியான அடித்தளமாக விளங்கியதோடு மட்டும் அல்லாமல் பல வெற்றிகரமான முயற்சிகளை வருங்காலத்திற்கு உதவும் வகையில் செயல்படுத்தினார். அதனை போற்றும் விதமாக  தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.

அபுல் கலாம் ஆசாதின் பணிகள்:

சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைந்த கல்வி முறையை உருவாக்க பாடுபட்டவர். இவரின் முயற்சியால் அனைவருக்கும் இலவச ஆரம்ப கல்வி திட்டம் உதித்தது. நவீன கல்வி முறைக்கும், சாகித்திய அகாதமி அமைப்பை உருவாக்க, இந்திய தொழில்நுட்பக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு உருவாவதற்கும் வித்திட்டவர் மௌலானா ஆசாத்.

அபுல் கலாம் ஆசாதின் விருதுகள்:

அபுல் கலாம் ஆசாத் இறப்பிற்கு முன்னே அவருக்கு பாரத ரத்னா விருது பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவில் தானும் ஒரு உறுப்பினராக இருந்ததால் அந்த விருதை புறக்கணித்த அவருக்கு, அவர் மறைந்த பிறகு 1992 அம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

அபுல் கலாம் ஆசாதின் நினைவாக இந்திய அஞ்சல் துறை தபால் தலைகளை வெளியிட்டது.

காமராஜர் பற்றி கட்டுரை 

டெல்லியில் மௌலானா ஆசாத்  மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரியும், போபாலில் மௌலானா ஆசாத் IIT, கர்நாடகாவில் மௌலானா  ஆசாத் உருது பல்கலைக்கழகம் போன்ற பல கல்வி நிறுவனங்கள் இவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.

அபுல் கலாம் ஆசாதின் இறுதிக்காலம் 

1958 பிப்ரவரி 2 அபுல் கலாம் ஆசாத் இயற்கை எய்தினார். அபுல் கலாம் ஆசாத் இறந்த பின்பும் பலரின் கல்விக்கு உதவிக்கொண்டு உள்ளார். அவரின் நினைவாக 1989-ல் மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்க உதவுகிறது. ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும்  கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட்டவர் அபுல் கலாம் ஆசாத் .

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement