மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு

Advertisement

மகாத்மா காந்தி வரலாறு

மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை என இந்திய மக்களால் போற்றப்பட்டார். அகிம்சை என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இவரை பற்றி  போகலாம். அதனால் இந்த பதிவில் இவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

பிறப்பு:

 மகாத்மா காந்தி வரலாறு

மகாத்மா காந்தி அவர்கள் 1869-ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாக பிறந்தார்.

கல்வி:

மகாத்மா காந்தி அவர்கள் பள்ளி படிக்கும் போதே நேர்மையாக நடந்து கொண்டார். இவர் 13– வயதில் கஸ்தூரிபாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 18 ஆம் வயதில் பாரிஸ்டர் என்ற வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்று படித்து முடித்து விட்டு பம்பாயில் வழக்கறிஞராக வேலை பார்த்தார். இவருக்கு ஹரிலால் காந்தி, மணிலால் காந்தி, தேவதாஸ் காந்தி, ராம்தாஸ் காந்தி என நான்கு மகன்கள் இருந்தனர்.

காமராஜர் வாழ்க்கை வரலாறு

இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட காரணம்:

1893-ஆம் ஆண்டு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணி புரிவதற்காக சென்றார். தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாட கூடாது என்ற நிகழ்வும், ரயில் பயணம் செய்த போது வெள்ளையர்கள் இல்லை என்பதால் பயணம் செய்வதற்கு மறுக்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் அவற்றின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தென்னாப்பரிக்காவில் உள்ள கறுப்பின மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் விழிப்புணரவை ஏற்படுத்தும் வகையில் 1894-ம் ஆண்டு இந்திய காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து அவரே பொறுப்பாளராக ஆனார். 1906- ம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில் அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் பல முறைக்கு சிறைக்கு சென்றுள்ளார். தென்னாப்பிரிக்காவில் உள்ள மக்களின் பிரச்சனையில் வெற்றியை அடைந்த பிறகு  இந்தியா திரும்பினார். கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.

இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பு:

ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். 1921-ம் ஆண்டு இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுப்பட்டார். 1922-ம் ஆண்டு காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார்.

காந்தியின் தண்டி யாத்திரை:

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. இதனை காந்தி அவர்கள் தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா என்று நினைத்து சத்தியாகிரகம் முறையில் இதனை எதிர்க்க முடிவு செய்துள்ளார். 1930-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரம் அளவில் தண்டியை குறி வைத்து நடைபயணம் மேற்கொண்டார். இந்த தூரத்தை 23 நாளில் வந்தடைந்தார். அங்குள்ள கடலில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக விற்பனை செய்தார். இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் பரவி, போராட்டம் தீவிரம் அடைந்து பல பேரை கைது செய்தார்கள். பொறாமை தீவிரம் அடைந்ததால் ஆங்கிலேயர்கள் உப்பு வரியை காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி திரும்ப பெற்று கொண்டனர்.

வெள்ளையனை வெளியேறு இயக்கம்:

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8- தேதி ஆங்கில அரசுக்கு எதிராக வெள்ளையனை வெளியேறு இயக்கத்தை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன தைரியத்தையும், அகிம்சை வலியையும் கண்டு ஆங்கில அரசு திகைத்தது. தொடர்ந்து காந்தியின் போராட்டத்தால் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் கிடைத்தது.

இறப்பு:

1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி அவர்கள் கொல்லப்பட்டார். மகாத்மா காந்தியின் உயர்ந்த பண்புகளான பகைவரிடமும் அன்பு காட்டுதல், வாய்மை போன்றவற்றை நாமும் பின்பற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். காந்தியடிகள் மறைந்தாலும் உலகமெங்கும் அகிம்சையின் அடையாளமாக, இன்றும் அவர் வாழ்ந்து வருகிறார்.

 நான் விரும்பும் தலைவர் காமராசர் கட்டுரை
காமராஜர் பொன்மொழிகள்

 

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru

 

Advertisement