ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினமாக கூறப்படுகிறது ?

Advertisement

April Fool Eppadi Vanthuchu In Tamil

நம் இந்திய நாட்டில் நிறைய தினங்கள் கொண்டாப்படுகின்றன. மகளிர் தினம், குழந்தைகள் தினம் இப்படி பல தினங்களை கொண்டாடுகிறோம். ஆனால் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் அன்று யாரும் நம்மை ஏமாத்திட கூடாதுனு நினைப்போம். அப்படி யாரும் உரிமை கொள்ளாத தினம் தான் ஏப்ரல் 1 பூல் டே. ஆனால் ஏன்  ஏப்ரல் மாத முதல் நாள் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில்  ஏப்ரல் பூல் டே எப்படி வந்துச்சின்னு தெரிஞ்சிப்போம்.

முட்டாள்கள் தினம் வரலாறு :

april fool day in tami

1562 ஆண்டு போப் கிரிகரி என்பவர் பழைய ஜூலியன் ஆண்டு கணிப்பு காலண்டரை மாற்றி, புதிய கிரிகோரியன் காலண்டரை நடைமுறைக்கு கொண்டு வந்தார். அது வரை பழைய காலண்டர் முறைப்படி ஏப்ரல் மாதம் தான் வருடத்தின் முதல் மாதமாக இருந்தது. ஆனால் புதிய காலண்டரில் ஜனவரி மாதத்தை வருடத்தின் முதல் மாதமாக போப் கிரிகரி புதுப்பித்து  கொண்டு வந்தார்.

இருப்பினும் இந்த புதிய காலண்டரின் மாற்றத்தை ஐரோப்பிய மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த புதிய காலண்டரை நடைமுறையில் மக்கள் ஏற்றுக்கொள்ள  நீண்ட வருடங்கள் ஆனது.

  • பிரான்ஸ் 1852 ஆம் ஆண்டில் புதிய காலண்டரை ஏற்று கொண்டது.
  • ஸ்கொட்லாந்து 1660 ஆம் ஆண்டில் புதிய காலண்டரை ஏற்று கொண்டது.
  • ஜெர்மனி, டென்மார்க், நோர்வே ஆகிய  நாடுகள் 1700 ஆம் ஆண்டில் புதிய காலண்டரை ஏற்று கொண்டது.
  • இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டில் புதிய காலண்டரை ஏற்று கொண்டது.

இந்த புதிய காலண்டரின் முறைப்படி ஜனவரி மாததின் முதல் நாள் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. இருப்பினும் சில மக்கள் பழைய ஜூலியன் காலண்டர் முறைப்படி உள்ள  ஏப்ரல் மாதத்தையே வருடத்தின் முதல் மாதமாக வைத்து புத்தாண்டை கொண்டாடி வந்துள்ளனர்.

அப்படி ஏப்ரல் மாதத்தை வருடத்தின் முதல் மாதமாக புத்தாண்டை கொண்டாடியவர்களை ஏப்ரல் பூல் என்று முதன் முதலில் அழைக்கப்பட்டார்கள். இது முதன் முதலில் பிரான்சில் அழைக்கப்பட்டது  என்றும் வரலாற்றில் கூறப்படுகிறது.

இப்படி நாளடைவில் ஏப்ரல் மாதத்தின் முதல் நாள் ஏப்ரல்1, ஏப்ரல் பூல் டேவாக உலகம் முழுவதும் பரவி கொண்டாடப்படுகிறது.

April Fools Day Wishes in Tamil 2024

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement