பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர் | Muthuramalinga Thevar Pirantha Oor

Advertisement

முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர்

நமது பள்ளி பருவத்தில் ஒவ்வொரு தலைவரையும் பற்றி படித்திருப்போம். அவர்கள் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து வைத்திருப்போம். அது போல நம் உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.

இவரை போல் இந்த மண்ணில் பிறக்க போவதில்லை. இதுவரை பிறந்ததும் இல்லை. அதனால் இவர் பிறந்த ஊர், பெற்றோர் பெயர் போன்றவற்றை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம். இதன் மூலம் நீங்கள் ஏதும் அரசு தேர்விற்கு தயார் ஆகுகிறீர்கள் என்றால் இந்த பதிவில் கூறியுள்ளது உதவியாக இருக்கும்.

முத்துராமலிங்க தேவர் பிறப்பு:

பசுபொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்ற சிற்றூர் உள்ளது.

அங்கு மிகவும் வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அகோடோபர் 30-ம் தேதி 1908-ம் ஆண்டு உக்கிரபாண்டி தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் பிறந்தவர் தான் முத்துராமலிங்க தேவர்.

பெயர் வைக்க காரணம்:

 முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர்

வீரம், விவேகம், நேர்மை போன்ற குறிக்கோளுடன் வாழ்ந்த ஆதி முத்துராமலிங்கத்தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்று நினைத்ததால் இவருக்கு முத்துராமலிங்க தேவர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

வளர்ந்த விதம்:

இவருக்கு 6 வயது இருக்கும் போது அம்மா இந்திராணி இறந்து விட்டார். இதனால் ஈர்த்து தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவியும் கொஞ்ச நாளிலே இறந்து விட்டார். அதன் பிறகு மூன்றாவது திருமண செய்து கொண்டார். அதனால் முத்துராமலிங்க தேவர் பாட்டி தான் வளர்த்தார்.

இவருக்கு தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தார். ஒருத்தி முஸ்லீம் பெண்ணிடம் தான் தாய்ப்பால் குடித்து வளர்ந்தார்.

கல்வி வாழ்க்கை:

தனது 6 வயதில் கல்வி வாழ்க்கையை ஆரம்பித்தார். 1917-ம் ஆண்டு கமுதியில் இருந்த அமெரிக்க மிஷன் ஆரம்ப பள்ளியில் கல்வி கற்க ஆரம்பித்தார். இவர் இயற்கையாகவே நல்ல குணம் உள்ளவராக இருந்தார்.

ஆடமபரமாக வாழ வேண்டும் வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் தூய ஆடை அணிய வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.

அரசியல் சாதனை:

 muthuramalinga thevar death date

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் பணியாற்ற ஆரம்பித்தவுடன் மூன்று முறை மக்களவைக்கு தேர்வானார். இந்திய அரசியலில் எந்த  கட்சிகளின் ஆதரவு இல்லாமல் 3 முறை 1952, 1957, 1962 போன்ற ஆண்டுகளில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மட்டும் தான்.

இறப்பு:

1962-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் அவரால் நாடாளுமன்ற தேர்தலில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

இவர் உடல் ஆரோக்யத்திற்காக சிகிச்சை எடுத்து கொண்டாலும் 1963-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி இந்த உலகத்தை விட்டு பிரிந்தார். இவரது உடலை அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதால் 30-ம் தேதி  இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாறு

இதுபோன்று  வரலாறு தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> வரலாறு

 

Advertisement