வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

Updated On: October 2, 2024 5:00 PM
Follow Us:
pattukottai kalyanasundaram varalaru
---Advertisement---
Advertisement

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரலாறு | Pattukottai Kalyanasundaram History in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் வரலாறு பதிவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். இவர் இன்னும் பல தமிழ் பாட புத்தகங்களில் இடம் பெற்று வருகிறார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி நாம் அனைவருமே கேட்டு இருப்போம். புத்தகங்களில் படித்து இருப்போம் அல்லது பிறர் கூற கேட்டு இருப்போம். ஆனால், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் யார் என்பதே நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால்,  அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

அதாவது,  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எப்போது தோன்றி, எப்போது மறைந்தார் என்பதை பற்றியும், இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியும், இவர் எழுதிய பாடல்கள் பற்றியும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சுரதா வாழ்க்கை வரலாறு

About Pattukottai Kalyanasundaram in Tamil:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர்:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் 13-04-1930 அன்று அருணாச்சலம், விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக கல்யாணசுந்தரம் பிறந்தார் . இவர் பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு  அருகில்  உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிற்றூர் ஆகும். 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தந்தை  கவிபாடும் திறனை கொண்டவர் ஆவர். கல்யாணசுந்தரத்திற்கு கணபதி சுந்தரம் என்ற மூத்த சகோதரரும், வேதநாயகி என்ற இளைய சகோதரியும் உள்ளனர்.

இவர் பள்ளி படிப்பை மட்டுமே மேற்கொண்ட இவர் அதன்பிறகு திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும்  அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் பிறகு இவருக்கு கௌரவாம் பால் என்பவருடன் திருமணம் ஆகி குமரவேல் என்ற ஆண் குழந்தையும்  பிறந்தது, அந்த குழந்தை பிறந்த அதே ஆண்டில் 08-10-1959 அன்று அகால மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரலாறு:

பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் அவர்கள் 19 வயதிலேயே கவி புனையும்  திறனை கொண்டிருந்தார். அதில் அதிகமான ஆர்வங்களையும் காட்டினார். இவர் பாடல்களின் உருவங்களை  காட்டாமல் அதனுடைய உணர்வுகளை காட்டியவர்.

இவர் குறைகளையும் வளர வேண்டிய நிறைகளையும் சுட்டிக்காட்டும் திறனை கொண்டவர் ஆவார். இவர் திரை அரங்குகளில் பாட்டாளி மக்களுக்காக பல சக்தியுள்ள பாடல்களையும் பாடி இயற்றினார்.

இவர் 1954 ஆம் ஆண்டு  முதல் முதலில் “படித்த பெண்” என்ற திரைப்படத்திற்கு பாடலை இயற்றி அந்த துறையில் முத்திரையும் படைத்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறப்பு:

பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் அவர்கள் சிறுவயதில் இருந்து விவசாயத்தில் அதிக ஆர்வங்களை கொண்டிருந்தார். அதன் பிறகு தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள், சிவராமன், இரணியன் ஆகியோருடன் இணைந்து விவசாய இயக்கத்தை வளர்க்க தீவிரமாகப் பாடுபட்டார்.

இவர் மாடு மேய்ப்பது, விவசாயம் போன்ற 17 வகையான தொழில்களையும் செய்து கொண்டு இருந்தார். அதன் பிறகு இவருக்கு நடிப்பில் அதிக ஆசைகள் இருந்ததால் “சக்தி நாடக சபா” என்ற இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

சக்தி நாடக சபாவில் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் நுழைய தொடங்கினார்.  கடைசியாக இவர் நடிப்பை விட்டுவிட்டு புரட்சிக்கவி பாரதிதாசனிடம் சேர்ந்து  கடைசியில் கவிஞராக உருவானார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பன் பரிமாணங்கள்:

இவர் தொடக்கத்தில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் போன்ற பதினேழு வகையாக தொழில்களையும் செய்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்:

1.ஆடுமயிலே (இரத்தினபுரி இளவரசி 1959 )
2.ஓ மல்லியக்கா (மக்களைப் பெற்ற மகராசி 1957 )
3.வம்புமொழி (பாண்டித்தேவன்1959 )
4.வா வா வெண்ணிலவே (செளபாக்கியவதி 1957 )
5.கனியிருக்கு (எதையும் தாங்கும் இதயம் 1962 )
6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே (பதிபக்தி 1958 )
7.சலசல ராகத்திலே -கங்கையக்கா (ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
8.துணிந்தால் துன்பமில்லை (ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
9.காக்காய்க்கும் (பிள்ளைக் கனியமுது )
10.வா வா சூரியனே (பாண்டித்தேவன் 1959 )
11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே (எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960) 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்:

பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அவரின் நினைவை போற்றவேண்டும் என்றும் வகையில் அவருக்கு “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்” அமைந்துள்ளது. அந்த மணிமண்டபத்தில் அவருடைய வாழ்க்கை வரலாறுகள் தொடர்பான இவருடைய புகைப்படங்கள்   கண்காட்சியாக  அமைக்கப்பட்டன.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement

Abirami Baskar

Hello, I m Abirami working as Junior Content Writer in Pothunalam.com, I would like to write a topics based on the following categories such as Health Tips, Beauty Tips, Recipes, Home Improvements & Banking Tips.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now