தேமல் மறைய டிப்ஸ்: நம் உடலுக்கு பாதுகாவலனாக இருப்பது தோல். தோலின் முக்கிய வேலை சூரிய ஒளி, காற்று மற்றும் தொற்று கிருமிகள் ஏற்படாமல் பல்வேறு கால சூழ்நிலைகளில் இருந்தும் நம் உடலை பாதுகாப்பது. இப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் நம் தோலை பாதிக்கின்றன, அதில் குறிப்பாக ஒவ்வாமையால் ஏற்படும் தேமலை சொல்லலாம்.
தோலின் மீது தட்டையாக வெண்மையாக தெரிவதை தான் தேமல் என்கிறோம். மலேசேசியாஃபர்ஃபர் (Malassezia Furfur) எனும் கிருமியால் இந்தப் பாதிப்பு உண்டாகிறது. தேமல் ஒரு சிலருக்கு ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்படலாம். சரி வாங்க நாம் இந்த பதிவில் தேமல் வருவதற்கான காரணம் மற்றும் அதை சரி செய்வதற்கான மருந்து பற்றியும் பார்க்கலாம்.
Advertisement
தேமல் ஏன் வருகிறது:
பூஞ்சை தொற்று வருவதற்கான முக்கிய காரணம் வியர்வை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது மற்றும் தொற்று ஏற்பட்டவர்கள் பயன்படுத்தும் சோப்பு, டவல் போன்றவற்றை நாமும் பயன்படுத்துவதினால் கூட தேமல் உருவாகும்.
வெள்ளை தேமல் குணமாக – Themal Kunamaga Tips in Tamil
Themal Home Remedies: காலை மற்றும் மாலை வீசும் வெயிலில் வைட்டமின் டி இருப்பதால் தோல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சூரிய ஒளி ஒரு சிறந்த மருந்து.
தேமலை சரி செய்வதற்கு மருந்தை உணவாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை அதனை Ointment-ஆக கூட எடுத்து கொள்ளலாம்.
Themal Maraiya Tips in Tamil – தேமலை சரி செய்வதற்கு சாப்பிட வேண்டிய உணவு:
தேமல் உள்ளவர்கள் இனிப்புகளை தவிர்த்து கசப்பான உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. பாவக்காயை வறுத்து அல்லது குழம்பில் வேக வைத்து சாப்பிடலாம்.
Themal Home Remedies: சீமை அகத்தி இலையை நன்றாக அரைத்து அதன் சாறை மட்டும் தேமல் இருக்கும் இடத்தில் தடவி வர Fungusசரியாகிவிடும்.
சீமை அகத்தி இலை கிடைக்கவில்லை எனில் அந்த இலையின் களிம்புகளில் செய்ய கூடிய மருந்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதனை பயன்படுத்தலாம்.
தேமல் குணமாக என்ன செய்ய வேண்டும்:
கருஞ்சீரகத்தை நன்றாக பொடி செய்து அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் பூஞ்சையை சரி செய்யும்.
குப்பை மேனி அல்லது வேப்பிலையை அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும்.
தேமல் மறைய டிப்ஸ் – Themal Maraiya Tips in Tamil:
குளிக்கும் பொழுது நலங்கு மாவு என்று சொல்லக்கூடிய பாசிபருப்பு மாவில் வெட்டி வேறு, விளாமிச்ச வேறு, கோர கிழங்கு, சீம கிச்சிலி கிழங்கு, சீமை அகத்தி இலை, வேப்பிலை, கருஞ்சீரகம் இவற்றை பொடியாக செய்து குளிக்கும் போது தடவி வர முழுமையாக தேமல் சரியாகி விடும்.
வெள்ளை தேமல் காரணம் – Vellai Themal Maraiya:
தேமல் உள்ளவர்கள் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் சூட்டை அதிகப்படுத்தும் உணவை தவிர்ப்பது நல்லது. குளிர்ச்சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஒரு நாளில் 2 முறை குளிப்பது சிறந்தது. குளித்து முடித்தவுடன் ஈரப்பதத்தை நன்றாக துடைத்தவுடன் ஆடை அணியுங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>
ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.
கால் மேல் கால் போட்டு உட்காருவது இன்றைய கால கட்டத்தில் யாரும் நாற்காலியில் உட்காரும் போது சாதாரணமாக உட்காருவதில்லை. ஏனென்றால் ஸ்டைலாகவும், ஆடம்பராகவும் இருப்பதற்காக கால் மேல்...
Paneer Side Effects in Tamil வாசகர்களுக்கு வணக்கம்..! சைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக பன்னீர் இருக்கின்றது. பன்னீரை பல விதமாக செய்து சாப்பிடுவார்கள்....
Beetroot Side Effects ஹலோ நண்பர்களே..! இன்றைய ஆரோக்கியம் பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தெரிந்து கொள்ள போகிறோம்...
சீரகம் தீமைகள் ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவின் மூலம் நண்பர்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை தெரிவிக்க போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி..! நீங்களும் இந்த பதிவை படித்து...
பிரண்டை பயன்கள் | Pirandai Uses And Side Effects in Tamil வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பிரண்டையின் பயன்கள் மற்றும் அதை சாப்பிடுவதால்...