ஆக்கம் Meaning in Tamil
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான அல்லது அவர் அவருக்கு தெரிந்த மொழிகளை பேசுகிறார்கள். அந்த வகையில் இந்த உலகத்தில் மொத்த மொழிகளாக 6,500 மொழிகள் பேசப்படுகின்றன. இத்தகைய மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக கருதப்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழ் மொழி பேசும் சிலருக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாளம் என இதுபோன்ற இதர மொழிகளும் தெரிந்து இருக்கிறது என்பது குறைப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.
அதன் படி பார்த்தால் நாம் பேசும் தமிழ் மொழியில் நமக்கு எல்லாம் விதமான அர்த்தங்களும், சொல்லுக்கான விளக்கங்களும் தெரியுமா என்பது ஒரு புதிராக தான் இருக்கிறது. ஏனென்றால் யாரும் எல்லோருக்கும் ஏதோ ஒரு சொல்லுக்கான சந்தேகம் என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. ஆகையால் நமக்கு தெரிந்த ஒரு வாக்கியமான ஆக்கம் என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
ஆருடம் என்றால் என்ன அதன் அர்த்தம்..
ஆக்கம் தமிழ் விளக்கம்:
ஆக்கம் என்பதற்கு தமிழில் ஒன்றை உருவாக்குவது என்பது அர்த்தம் ஆகும். அதாவது ஏதோ ஒரு அறிவியல் படிப்பின் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது மூலமாக ஒன்றை உருவாகும் முறை ஆகும்.
மேலும் ஆக்கம் என்ற சொல்லுக்கு உண்டுபண்ணு, வளர்ச்சி, பொருள் விளைவு, விருத்திமற்றும் முன்னேற்றம் என்பதும் பொருள்படும்.
ஆகுதல் என்னும் வினைச்சொல்லிலிருந்து பிறந்தது தான் ஆக்கம்.
ஆக்கம் in English:
தமிழில் சொல்லப்படும் ஆக்கம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Creation என்று அழைக்கப்டுகிறது.
ராசிபலனில் ஆக்கம் என்றால் என்ன?
தினமும் நாம் பார்க்கும் ராசி பலனில் சிலருக்கு ஆக்கம் என்று குறிப்பிட்டு இருக்கும். அதற்கு பொருள் என்னவென்றால் அன்றைய நாளில் நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப்போகிறோம் என்று குறிப்பிடுவது ஆகும்.
அதில் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் உருவாக்குவது என இவை அனைத்தும் அடங்கும்.
ஆக்கம் வேறு பெயர்கள்:
ஆக்கம் என்பதனை பல வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை பற்றி அறிந்து கொள்வோம்.
- படைப்பு, உருவாக்கம், சிருஷ்டி
- உயர்வு, விருத்தி
- இலாபம், நன்மை, நலன்
- ஈட்டம்
- செல்வம்
- பொன்
- இலக்குமி
- ஆசி
- அமைத்துக்கொள்ளுகை
- கொடிப்படை
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |