786 எண் ரகசியம் | 786 Number Meaning in Tamil
ஒவ்வொரு மதத்திற்கும் வித்தியாசமான முறையில் வழிபாடு நடக்கும். இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் போன்ற நாடுகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் எந்த ஒரு விஷயத்தை எழுத ஆரம்பிக்கும் போது “786” என்ற எண்ணினை எழுதித்தான் ஆரம்பிப்பார்களாம். அப்படி என்ன அந்த எண்ணில் இருக்கிறது? அந்த எண்ணிற்கு என்னதான் சரியான அர்த்தம் என்று கேட்கிறீர்களா. உங்களுடைய கேள்விக்கு சரியான பதிலை அளிப்பதற்கு தான் இந்த பதிவில் 786 என்ற இஸ்லாமிய எண்ணிற்கு அர்தத்தினை பதிவிட்டுள்ளோம். படித்து தெரியாத நான்கு பேரிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..!
ரௌத்திரம் பழகு என்பதன் பொருள் |
786 Meaning in Tamil:
“786” என்ற எண்ணிற்கு அர்த்தம் “பிஸ்மில்லா அல்-ரஹ்மான் அல்-ரஹீம்” என்ற குரான் வெளிப்பாட்டின் மொத்த எண் மதிப்பை இந்த எண் அறிவுறுத்துகிறது.
பிஸ்மில்லா என்ற வார்த்தையின் சிறப்பு:
அரபு எழுத்துக்கள் இரண்டு வழிகளில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவான முறை அலிஃப், பா, டா, தா போன்ற அகர வரிசைப்படி அவற்றை ஒழுங்குபடுத்துகிறது. அப்ஜாத் முறை என்றும் அழைக்கப்படும் மற்ற முறை ஒன்று முதல் ஆயிரம் வரை தொடங்கும் ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் ஒரு எண் கணித மதிப்பை ஒதுக்கியுள்ளது.
எண்களில் அப்ஜாத் முறை இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வாழும் இஸ்லாமியர்களிடம் பெரும் புகழை அடைந்துள்ளது. பிஸ்மில்லா என்ற வார்த்தையின் எழுத்துக்களின் எண் மதிப்புகளை ஒன்றாக கூட்டும் போது 786 என்ற எண் கிடைக்கிறது. ஆகவே, பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் உள்ள சில முஸ்லிம்கள் 786 என்ற எண்ணை பிஸ்மில்லாவுக்கு மாற்றாக அல்லாஹ் என்று பயன்படுத்துகின்றனர்.
முஸ்லிம் வீட்டு பிரியாணி மசாலா பவுடர் ரகசியம் இது தாங்க..
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |