உறுதியான சான்றிதழ் என்றால் என்ன? | Bonafide Certificate Meaning in Tamil

உறுதியான சான்றிதழ் | Bonafide Certificate in Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இன்றைய பொதுநலம்.காம் பதிவில் Bonafide Certificate என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம். நாம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது இந்த சான்றிதழ் பற்றி கேள்விபட்டிருப்போம். ஆனால் பலருக்கும் இந்த சான்றிதல் எதற்காக பயன்படுத்தபடுகிறது, இதன் அர்த்தம் என்னவென்று தெரிவதில்லை, அதனால் இந்த தொகுப்பில் நாம் Bonafide Certificate பற்றிய தகவலை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Bonafide Certificate Meaning in Tamil:

  • போனஃபைட் சான்றிதழ் என்பதற்கு உறுதியான சான்றிதழ் என்று பொருள்.
  • அதாவது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பள்ளி அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்று.

What is Bonafide Certificate in Tamil:

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளீர்கள் என்பதைக் காட்ட இது வழங்கப்படுகிறது.

Bonafide Certificate Uses in Tamil:

  • மாணவர்களுக்கு இந்த ஆவணம் உதவித்தொகை கிடைக்க பயன்படுகிறது.
  • போது போக்குவரத்து நிறுவனங்களால் சலுகைகள் வழங்கபடுவதற்கு உதவுகிறது.
  • பாஸ்போர்ட், விசா போன்ற விண்ணப்பங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு, சில நிறுவனங்கள் மாணவர்களுக்கு சலுகை விலையில் கடன்களை வழங்குவதற்கு உதவுகிறது. கருத்தரங்கு, மாநாடு அல்லது அதுபோன்ற மற்றொரு நிகழ்வில் கலந்து கொள்ள உதவுகிறது
  • ஒரு சில நிறுவனங்களில் ஊழியர்களின் தகுதியை நிருபிக்க பயன்படுத்தபடுகிறது.

போனஃபைட் சான்றிதழ்:

உறுதியான சான்றிதழ் இரண்டு வகைகளில் உள்ளது அவை

  1. தற்காலிக உறுதியான சான்றிதழ்
  2. நிரந்தர உறுதியான சான்றிதழ்
  • தற்காலிக உறுதியான சான்றிதழை நீங்கள் ஆறு மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நிரந்தர உறுதியான சான்றிதழ் ஒரு நபர் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வரை உபயோகபடுத்த முடியும்.
முதல் பட்டதாரி சான்றிதழ் பற்றிய தகவல்கள்

how to write bonafide certificate in tamil:

பெறுநர்: 

முதல்வர்,

பள்ளி அல்லது கல்லூரியின் முகவரி

தேதி

பொருள்: உறுதியான சான்றிதழுக்கான விண்ணப்பக் கடிதம்

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் எனது பெயர் ச.பல்லவி. நான் நமது கல்லூரியில் (பள்ளியில் படிப்பவர்கள் தங்களுடைய Std-ஐ குறிப்பிடவும்) வேதியியல் பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். என்னுடைய ரோல் எண் 16czc253. நான் இந்த ஆண்டிற்கான உதவித்தொகை பெற வேண்டும். அதற்கு உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான சான்று எனக்குத் தேவைப்படுகிறது, அதனால் தாங்கள் நமது கல்லூரியில் நான் படித்து வருவதற்கான சான்றிதழை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

 

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

  (கையெப்பம்)

உறுதியான சான்றிதழ் வடிவம்:

bonafide certificate in tamil

  • நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி
  • மாணவரின் பெயர் மற்றும் பட்டியல் எண்
  • பாடநெறி காலம்
  • வழங்கப்பட்ட தேதி மற்றும் செல்லுபடியாகும் காலம்
  • வழங்கும் அதிகாரத்தின் கையொப்பம்
  • ஊழியரின் விவரங்கள்

குறிப்பு: சான்றிதழ் விண்ணப்பக் கடிதத்தின் வடிவம் வேறுபட்டது

தமிழ் வழி கல்வி பயின்ற சான்றிதழ்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil