Boomer Uncle -னா என்ன? ஏன் இவர்களை Boomers என்று அழைக்கிறோம்!

Boomer Uncle Meaning in Tamil

Boomer Uncle Meaning in Tamil

தற்பொழுது பெருமபலன 2K கிட்ஸ் Boomer Uncle என்று குறிப்பிட்ட நபர்களை அழைக்கின்றன இதற்கு என்ன காரணம். ஏன் குறிப்பிட்ட நபர்களை பூமர் அங்கிள் என்று சொல்கின்றன. Boomer Uncle என்பது என்ன அர்த்தம் என்று பலருக்கு இருக்கும் கேள்வியாக உள்ளது. இந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் இன்றிய பதிவு இருக்கும். சரி வாங்க Boomer Uncle என்பதற்கான அர்த்தத்தை இப்பொழுது நாம் படித்திரியலாம்.

பூமர் அங்கிள் என்றால் என்ன? – Boomer Uncle Meaning in Tamil:Boomer Uncle

பொதுவாக ஒருவர் தன்னை பற்றி பெருமையாக பேசினாலோ அல்லது மற்றவர்களுக்கு அதிகமாக அட்வைஸ் கொடுத்தாலோ அந்த அட்வைஸினை ஏற்றுக்கொள்ள முடியாமலும், அந்த அட்வைஸினை சொல்லியவர்களை திடவமும் முடியாமல் அவர்களை கலாய்க்கும் வகையில் கூறப்படுவது தான் Boomer Uncle என்ற வார்த்தை.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இவர்கள் தொடர்ந்து அட்வைஸ் கொடுப்பது, எவர் எதனை கூறினாலும் தன்னுடைய கருத்தை மட்டும் அரை மணி நேரத்திற்கு ஆற அமர நிதானமாக நல்ல நீளமாக விளக்குபவர்களை Boomer Uncle என்று அழைக்கின்றன.

அதே போல சொல்ல வந்த விஷயத்தை பூமர் போல ஜவ்வாக இழுத்துக்கொண்டே செல்பவர்களுக்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இந்த பூமர் அங்கிள் என்ற வார்த்தை தன்னை விட பெரிய வையத்தில் உள்ளவர்களின் மனதை காயப்படுத்தாமல் நாசுக்காக கலாய்க்க பயன்படுத்தும் வார்த்தையாக இருக்கிறதாம்.

குறிப்பாக இந்த பூமர் அங்கிள் என்ற வார்த்தை சமீபகாலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும். ஓகே பூமர் என்ற வார்த்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருவதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. குறிப்பாக 1946 முதல் 1964 வரையிலான கால கட்டத்தில் பிறந்தவர்களை பேபி பூமர்ஸ் என்று சொல்லப்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஏனென்றால் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் மேலை நாடுகளில் புதிய குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகளவு பூம் ஆகி அதாவது ஏற்றம் கண்டிருந்ததாம்.

தையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Sin என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்