EPFO பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

EPFO Meaning in Tamil..!

வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் EPFO என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள்.  EPFO என்பது தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயன்படும் நோக்கத்தோடு இந்த EPFO திட்டம் கொண்டு வரபட்டது. இந்த EPFO  திட்டம் தொழிலாளர்களுக்கு மிகவும் பயன்பட்டு வந்தது. இதுபோன்ற EPFO பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் பாருங்கள் ⇒ IFSC Code என்றால் என்ன?

EPFO என்றால் என்ன..?

EPFO என்பது தொழிலாளர்கள் அவர்கள் ஓய்வுக் காலத்தில் பயனளிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. EPFO என்பதை தமிழில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்று கூறப்படுகிறது.

இந்த EPFO  திட்டத்தை தொழிலாளர்களின் நீண்ட கால சேமிப்பு திட்டம் என்று கூறலாம். இந்த திட்டத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகை வட்டியுடன் அளிக்கப்படுகின்றது.

இந்த வருங்கால வைப்பு நிதி தொகையானது தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து சேமிக்கப்பட்டு, பின் அவர்களின் ஓய்வு காலத்தில் வட்டியுடன் கொடுக்கப்படுகிறது.

இந்த EPFO திட்டம் 1952 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த தொகையானது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படுகிறது. இப்படி சேமிக்கப்படும் சம்பளத் தொகை அவர்களுக்கு ஓய்வு காலத்தில் பயன்படுகிறது.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ NEFT என்றால் என்ன..?

EPFO Full Form in Tamil:

EPFO என்பது ஆங்கிலத்தில் Employees Provident Fund Organisation என்பதன் விரிவாக்கம் ஆகும். இந்த சேமிப்பு திட்டம் மொத்த ஊழியர்களின் சேமிப்பு தொகை என்று அழைக்கப்படுகிறது. EPFO தொகை தொழிலாளர்களுக்கு அவர்களின் ஓய்வு காலத்தில் பயன்படும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது.

வருங்கால வைப்பு நிதி விதிகள்..? 

EPFO அமைப்பின் சேவைகள் மற்றும் திட்டங்களில் சேர வேண்டும் என்றால், ஒரு ஊழியர் குறைந்த பட்சம் 15,000 ரூபாய் சம்பளத்தை பெற வேண்டும்.

இந்த சேவைகள் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.

இந்த EPFO தொகையை அந்த நிறுவனமே முடிவு செய்து கொள்ளலாம். எல்லா நிறுவனமும் ஒரே மாதிரியான EPFO தொகையை வழங்குவதில்லை.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement