Colour ஹார்ட் எமோஜில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!

Advertisement

ஹார்ட் எமோஜில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா? Blue Black Red White Green Heart Emoji Meaning in tamil

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக நாம் Chat செய்யும் போது அந்த Chat-யில் எமோஜிகளையும் சேர்த்து மெசேஜ் செய்வோம். அவற்றில் ஒன்று தான் ஹார்ட் இமோஜும்.. இந்த ஹார்ட் எமோஜில் பல வகையான வண்ணங்கள் உள்ளது. ஒவ்வொரு ஹார்ட் எமோஜிக்கும் ஒவ்வொரு அர்த்தமும் உள்ளது. ஆக நாம் Chat செய்யும் போது யாருக்கு எந்த ஹார்ட் இமோஜை அனுப்ப வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆக இன்றைய பதிவில் ஹார்ட் எமோஜிகளுக்கான அர்த்தகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

Purple Heart – ஊதா அல்லது வயலட் இதயம்:

Purple Heart

இந்த Purple Heart ஒரு நல்ல பாசத்தையும், புரிதலையும் குறிக்கக்கூடியது ஆகும். பாசம் என்று சொன்னவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது நமது அம்மா மட்டும் தான். ஆக இந்த ஹார்ட் நாம் நமது அம்மாவின் மீது வைத்திருக்கும் தீராத பாசத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஹார்ட் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Emoji’s ஏன் Yellow Colour-ல் மட்டும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..?

சிவப்பு இதயம் – Red Heart Meaning in Tamil:red heart emoji meaning in tamil

இந்த Red Heart-ஐ பொதுவாக அனைவருமே பயன்படுத்தக்கூடிய ஒரு ஹார்ட் ஆகும். அதாவது இந்த ஹார்ட் ஒருவர் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் எமோஜி ஆகும். ஆக பொரும்பாலும் காதலர்கள், கணவன் மனைவி இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். நண்பர்களுக்கு இந்த ஹார்ட் பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது.

பச்சை இதயம் – Green Heart Meaning in Tamil:

Green Heart Emoji Meaning in Tamil

இந்த Green Heart நமது வாழ்கை மீது வைத்திருக்கும் காதலையும், நமது வாழ்க்கைமீது உள்ள ஒரு பற்றையும் மற்றும் இயற்கை மீது உள்ள பற்றையும் வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு ஹார்ட் ஆகும்.

ஆரஞ்சு இதயம் – Orange Heart Emoji Meaning in Tamil:Orange Heart Emoji Meaning in Tamil

இந்த ஆரஞ்சு ஹார்ட் எமோஜின் அர்த்தம் யாருக்கும் அவ்வளவாக தெரிய வாய்ப்புகள் இல்லை. இந்த ஆரஞ்சு ஹார்ட் எமோஜி எதற்கு பயன்படுத்த வேண்டும் என்றால். அரை மனதான ஒரு அன்பை குறிகூடிய ஒன்றாகும். உதாரணம் ஒருவர் உங்களை விரும்புகிறார்கள், இருந்தாலும் நீங்கள் அவர்களை விரும்பவில்லை, நீங்கள் அவரை நண்பராக தான் அவர்களை பார்க்குறீர்கள் என்றால் அதனை வெளிப்படுத்த இந்த ஆரஞ்சு நிற ஹார்டினை நீங்கள் பயன்படுத்தலாம்.

நீலநிறம் இதயம் – Blue Heart Emoji Meaning in Tamil:

இந்த நீலநிறம் இதயத்தை நீங்கள் எதற்கு பயன்படுத்தலாம் என்றால், ஒரு நம்பிக்கை, ஒரு விசுவாசம் போன்றவற்றை குடிப்பிடுவதற்கு இந்த ப்ளூ ஹார்ட்டை பயன்படுத்தலாம். அதாவது ஒரு மீது நீங்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு இந்த நீலநிறம் இதயத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Hand இமோஜி தமிழ் மீனிங்

மஞ்சள் நிற இதயம் – Yellow Heart Meaning in Tamil:Yellow Heart Emoji Meaning in Tamil

இந்த மஞ்சள் நிற இதயம் எதற்கு பயன்படுத்தலாம் என்றால் நமக்குள் இருக்கும் ஒரு மகிழ்ச்சி, ஒரு தூய்மையான நட்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த மஞ்சள் நிற இதயம் நண்பர்களுக்கு பயன்படுத்தலாம்.

Heavy Heart Emoji Meaning in Tamil:Heavy Heart Emoji Meaning in Tamil

நாம் நமக்குள் வைத்திருக்கும் காதலை, அவர்களிடம் வெளிப்படுத்தும்போது இந்த Heavy Heart-ஐ பயன்படுத்தலாம்.

Double Heart Meaning in Tamil:Double Heart Emoji Meaning in Tamil

இந்த Double Heart Emoji அன்பு மற்றும் நட்பை குறிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு ஹார்ட் ஆகும். குற்ப்பிக்க பெண்கள் தங்களது பிரண்ட்சிப் வட்டாரத்தில் அதிகம் பயன்படுத்தபடும் ஒரு ஹார்ட் ஆகும்.

Beating Heart Emoji Meaning in Tamil:Beating Heart Emoji Meaning in Tamil

இந்த Beating Heart ஒரு ஆழமான அன்பை குறிக்கக்கூடியது. குறிப்பாக கணவன் மனைவி இருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை வெளிப்படுத்த இந்த ஹார்ட்டை பயன்படுத்தலாம். அதேபோல் காதலர்களும் இந்த ஹார்ட்டை பயன்படுத்தலாம்.

Growing Heart Emoji Meaning in Tamil:Growing Heart Emoji Meaning in Tamil

இந்த Growing Heart நாம ஒருவர் மீது வைத்திருக்கும் காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை வெளிப்படுத்த பயன்படுத்தபடும் ஹார்ட் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இமோஜி தமிழ் மீனிங்

Heart With Ribbon Emoji Meaning in Tamil:Heart With Ribbon Emoji Meaning in Tamil

காதலர்கள் கிப்டு கொடுக்கும்போது கண்டிப்பாக இந்த Heart With Ribbon அந்த கிபிட்ல் இருக்கும். ஏன் இந்த எமோஜி பயன்படுத்தப்படுகிறது என்றால். கிபிட் கொடுப்பவர்கள் மனதில் அவர்களுடைய லவர் இன்னமும் அதிகளவு நிறைந்து இருக்கிறார் என்பதை வெளிப்படுத்த இந்த எமோஜி பயன்படுத்தப்டுகிறது.

Black Heart Emoji Meaning in Tamil:

Black Heart Emoji Meaning in Tamil

பொதுவாக கருப்பு நிறம் என்பது ஒரு துன்பம் அல்லது ஒரு துயரத்தை குறிக்கக்கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆக இந்த கருப்பு நிற எமோஜி நான் துன்பமாக இருக்கேன், துயரத்துடன் இருக்கேன் என்பதை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு எமோஜி ஆகும்.

வெள்ளை இதயம் – White Heart Emoji Meaning in Tamil:White Heart Emoji Meaning in Tamil

இந்த வெள்ளை எமோஜி தூய்மையான அன்பு அல்லது ஆதரவை வெளிப்படுத்த பயன்படுத்தபடும் ஒரு எமோஜி ஆகும். குறிப்பாக ஒரு தூய்மையான நபரை வெளிப்படுத்த இந்த ஏமோஜை பயன்படுத்தலாம்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement