Kanishka Name Meaning in Tamil
பொதுவாக குழந்தைகளுக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அதனால் பெயர்களை குழந்தை கருவுற்ற நாளிலிருந்து ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயரை வைப்பது பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயரை வைப்பது என்று யோசிப்பார்கள். அந்த பெயரானது வித்தியாசமாகவும், அர்த்தமுள்ளதாகவும் வைக்க வேண்டும் என்று நினைப்போம். பொதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும், அந்த அர்த்தத்தை பற்றி நமக்கு தெரிந்திருக்காது. அது போல பெயர்களிலும் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் கனிஷ்கா, கனிஷ்கா ஸ்ரீ போன்ற பெயருக்கான அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
கனிஷ்கா பெயர் அர்த்தம்:
கனிஷ்கா என்ற பெயருக்கு தங்கம் மற்றும் மன்னரின் மகள் என்பதை குறிக்கிறது.இந்த பெயரில் உள்ளவர்கள் சிறந்த நபர்களாக இருப்பார்கள். அழகன் தோற்றம் உடையவர்களாகவும், பொறுமையாகவும் இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இயல்பாகவே இருக்கும். இவர்கள் தனிமையை விரும்ப மாட்டார்கள்.
மேலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் மற்றவரிடம் இருந்து உதவியை பெற மாட்டார்கள். மிகவும் புத்தி கூர்மையுடன் இருப்பார்கள். கற்பனை சக்தி இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை பெயர்கள் |