வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மடப்பயல் என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா?

Updated On: September 20, 2023 12:56 PM
Follow Us:
mada payale porul in tamil
---Advertisement---
Advertisement

மடப்பயல் பொருள் என்ன? | Mada Payale Porul in Tamil

நண்பர்களே வணக்கம்.. நாம் மற்றவர்களை டீசன்டாக திட்டும் வார்த்தை தான் போட மடப்பயலே. இந்த மடப்பயல் என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரிந்தால் அதன் பிறகு மற்றவர்களை திட்டுவதற்கு இந்த மடப்பயல் என்ற வார்த்தையை உபயோகப்படுத்த மாட்டோம். பொதுவாக பலர் மடப்பயல் என்றால் முட்டாள் பையன், அறிவற்றவன் என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் மடப்பயல் என்பதற்கு அது அர்த்தம் இல்லை, மடப்பயல் என்பதற்கு அழகான அர்த்தம் உள்ளது அது என்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பான் இந்தியா என்றால் என்ன?

மடப்பயல் என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா?

இப்போது பலர் மடப்பயல் என்றால் முட்டாள் பையன் – அறிவற்றவன் என்று பொருள் கொள்கிறோம். இது பொருள் மாறிவிட்ட பழந்தமிழ்ச் சொல் ஆகும்.

பெண்ணிற்கு உரிய அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகும். அவற்றில் மடம் என்பது இளமையை குறிப்பதே ஆகும்.

அதாவது மடம் என்பது இளமையை குறிக்கும் ஒரு சொல் ஆகும். இருப்பினும் பூஜை செய்யும் மடம் என்பது வேறு சொல் ஆகும்.

மானே மட மகளே என்றால் மான் போன்று அழகை கொண்ட இளம் பெண்ணே என்று பொருள் ஆகும்.

மடக்கொடி கேளாய் என்பது என்னவென்றால் கொடி போன்ற மெல்லிய பெண்ணே கேட்பாயாக என்பதே பொருள் ஆகும்.

மடப்பயலே என்றால் இளமையான பையன் என்று தான் பொருள்.

ஆக இந்த பதிவின் மூலம் மடப்பயல் என்பதற்கான பொருளை தெரிந்துகொண்டீர்களா.. இது போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தெரிந்துகொள்ள நமது பதிவை தொடர்ந்து பார்வையிடுங்கள். பழந்தமிழ் சொற்களுக்கான அர்த்தங்களை அறிவும் நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழிக்கான உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now