Why Couples are Separated in Aadi Month in Tamil | ஆடி மாதம் புது தம்பதிகள் பிரிந்து இருப்பது ஏன்.?
தமிழகத்தில் ஆடி மாதம் என்றால் புதிதாக திருமணம் ஆன தம்பதியர்களை ஒன்று சேரக்கூடாது என்று பிரித்துவைக்கும் பலம் இன்று வரை இருக்கிறது. இதன் காரணமாக ஆடி மாதம் பிறகும் முன்னமே புதிதாக திருமணம் ஆன பெண்ணை பிறந்த வீட்டிற்கு அழைத்து செல்வார்கள். அதன் பிறகு ஆடி 18 அன்று புது தம்பதியர்களுக்கு பெண் வீட்டுக்காரர்கள் புது ஆடைகளை எடுத்து கொடுத்து, விருந்து வைப்பார்கள்.. அதே போல் சில ஆடி அமாவாசை அன்று மருமகளும் மாமியாரும் ஒரே வீட்டிற்குள் இருக்கக்கூடாதுனும் சொல்லுவாங்க..
ஏன் இந்த பழக்கம் பின்பற்றப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? பொதுவாக ஆடி மாதம் என்றாலே இறைவனை வழிபட ஒதுக்கப்பட்ட மாதமாக பார்க்கப்படுகிறது. ஆக இந்த ஆடி மாத்தில் வேறு எந்த ஒரு எண்ணங்களும் மனதில் எழக்கூடாது என்பதற்காக ஆடி மாதத்தில் கல்யாணம் மற்றும் வேறு எந்த சுபநிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று சொல்கின்றன. இந்த ஆடி மாதம் முழுவதுமே திருவிழா மாதமாக பார்க்கப்படுகின்றது. சரி வாங்க இந்த பதிவில் ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
புனிதம் வாய்ந்த ஆடி மாதம்:
பூமி சூரியனை சுற்றி வரும் 360 டிகிரி வட்டப் பாதையில், பூமி சூரியனைக் கடக்கும் ஒவ்வொரு 30 டிகிரியும் ஒவ்வொரு மாதமாகின்றன. இந்த 12 மாதங்களும் உத்தராயணம், தட்சிணாயணம் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆடி மாதம் தட்சிணாயணத்தின் தொடக்க மாதமாக அமைகின்றது. வெயில் கொடுமையில் இருந்து பூமி விடுபடுகிறது. எனவே ஆடி மாதம் சிறப்பு பெறுவதுடன், பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது.
ஏன் ஆடி மாதம் புது தம்பதிகள் சேரக்கூடாது?
நம் முன்னோர்கள் பின்பற்றிய அனைத்து விஷயங்களிலும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அப்படி பின்பற்றிய விஷயங்களில் ஒன்று தான் புதிதாக திருமணம் ஆன தம்பதியர்கள் ஆடி மாதம் ஒன்று சேரக்கூடாது என்பதும். ஆடிமாதத்தில் புது மணத்தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்தால், அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தைகள் பிறக்கும். அப்போது வெயில் அதிகமாக இருக்கும், அதுமட்டுமல்லாமல் அக்னி நட்சத்திரமாக இருக்கும். அதனால்தான் புது மணத் தம்பதியைப் பிரித்து வைத்தனர். ஆக அந்த குழந்தைக்கும், தாய்க்கும் உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். இதன் காரணமாக தான் இந்த பழக்கம் பின்பற்றப்படுகிறது. ஆடி 18-ம் பெருக்கு நாள் என்பது தட்சணாயன காலத்தில் முதல் 18 நாள்கள் சிறப்பானதாக அமைகின்றது. இந்த நாளில் புது மணத்தம்பதிகள் ஆறு, குளம், கடலில் நீராடி மனக்கட்டுப்பாட்டுடன் முன் 18 நாள்களும் பின் 18 நாள்களுமாக விரதம் இருந்தால், வம்சம் தழைத்தோங்கும். இந்த காரணத்திற்க்காக தான் புதிதாக ஆன தம்பதியர்களை ஆடி மாதம் ஒன்று சேரக்கூடாது என்று சொல்கின்றன.இதையும் கிளிக் செய்து படியுங்கள் → புரட்டாசி மாதத்தில் எதற்காக அசைவம் சாப்பிடக்கூடாது ?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |