இளமையான தோற்றம் பெற
வணக்கம் நண்பர்களே இன்று நம் அழகு குறிப்பு பதிவில் மிகவும் பயனுள்ள ஒரு டிப்ஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். அதாவது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கருத்திட்டுகள், முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு முகம் சீக்கிரமாகவே தனது இளமை தோற்றத்தை இழந்துவிடுகிறது. இது போன்ற பிரச்சனைகளின் பொழுது கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கிறோம். ஆனால் இவை சில நாட்கள் நல்ல பயன்களை தந்து வந்தாலும் அதன் பிறகு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே நம் சருமத்தை பராமரிக்கும் நோக்கில் வீட்டில் உள்ள இயற்கை பொருட்களை வைத்து எப்படி இளமை தோற்றத்தை பெறுவது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
முகம் 24 மணி நேரமும் பளபளப்பாக இருக்க இதை டிப்ஸை Follow பண்ணுங்க.! |
சரும பராமரிப்பு:
உங்களுடைய சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பதற்கு பொதுவாக நம் வீட்டில் உள்ள பொருட்களை உபயோகிப்போம். அந்தவகையில் இயற்கையான ஆளிவிதைகளை கொண்டு முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம். ஆளிவிதை அழகு குறிப்புகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆளிவிதையில் ஜெல் செய்து அதை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.
ஆளி விதை ஜெல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- ஆளிவிதை- 1/2 கப்
- தண்ணீர்- 2 கப்
ஆளி விதை ஜெல் செய்முறை:
ஸ்டேப்:1
முதலில் சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதை மிதமான சூட்டில் வைக்கவேண்டும். அதன் பிறகு ஆளிவிதை 1/2 கப் மற்றும் தண்ணீர் 2 கப் சேர்த்து மர கரண்டியால் நன்றாக கிளறிவிட வேண்டும்.
ஸ்டேப்:2
தொடர்ந்து மரக்கரண்டியை வைத்து கிளறும் பொழுது வெள்ளை நிறத்தில் ஜெல் போல மாற செய்யும். அந்த ஜெல் பதம் வந்ததும் தீயை அணைத்து விட்டு அதை காற்று உள்ள இடத்தில் ஆறவிட வேண்டும்.
ஸ்டேப்:3
ஜெல் நன்றாக ஆறிய பிறகு ஒரு காட்டன் துணியை எடுத்து அந்த ஜெல்லை வடிகட்டி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு காற்று போகாத அளவுக்கு இருக்கும் கண்ணாடி பாட்டில் எடுத்து அதில் இந்த ஜெல்லை சேர்த்து, பிரிட்ஜில் வைக்க வேண்டும். இவை ஒரு மாதம் வரை அப்படியே இருக்கும்.
ஆளிவிதை ஜெல் தயாரானதும் நீங்கள் குளிக்கும் சமயத்தில் இதை முகத்தில் மசாஜ் செய்து 20 அல்லது 30 நிமிடம் கழித்து குளித்து வந்தால் முகம் புத்துணர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கும். எனவே இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இதை செய்து உங்கள் முகத்தின் அழகை மேம்படுத்துங்கள்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |