தலைமுடி அடர்த்தியாக வளர செய்யும் கண்டிஷனர்..!

தலைமுடி வளர

தலை முடி அடர்த்தியாக வளர செய்யும் கண்டிஷனர்..!

Hair care tips in tamil / hair adarthiyaga valara tips in tamil:

நன்கு தலைமுடி வளர (hair care tips in tamil) தரமான எண்ணெய் மற்றும் ஷாம்பு எப்படி முக்கியமோ, அதேபோல் கண்டிஷனரும் கூந்தலுக்கு தேவை.

முடி அடர்த்தியாக வேகமாக வளர மற்றும் கூந்தலின் வேர்களை தூண்டுவதற்கு எண்ணெய் உதவி செய்கிறது. இருப்பினும் அவற்றை போஷாக்குடன் வளர்வதற்கு கண்டிஷனர் தேவை.

என்னதான் நாம் கூந்தலை நன்கு வளர்த்தாலும் மிக எளிதில் பலமிழந்து உதிர்ந்து கொட்டிவிடும்.

கண்டிஷனர் என்று சொன்னதும் கடையில் விற்கப்படும் கண்டிஷனர் இல்லை.

newபேரழகு முகத்திற்கான SPL சந்தனம் ஃபேஸ் பேக்!!!

சரி வாங்க கூந்தலுக்கு போஷாக்கினையும், ஈரப்பதத்தையும் எளிதில் அளிக்க கூடிய 3 கண்டிஷனரை இப்போது எப்படி நாமே வீட்டில்(hair adarthiyaga valara tips in tamil) தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

முடி அடர்த்தியாக வளர எண்ணெய் :

தேவையான பொருட்கள்:

 1. தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
 2. எலுமிச்சை சாறு –1 டேபிள் ஸ்பூன்
 3. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
 4. ரோஸ் வாட்டர் – சில துளிகள்

தலை முடி அடர்த்தியாக வளர கூந்தல் எண்ணெய் தயாரிப்பு :

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தலை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து நுனி வரை நன்றாக தேய்க்கவும்.

பின்பு 1/2 மணி நேரம் வரை காத்திருந்து, பின்பு கூந்தலை அலசவும். இவை கூந்தலில் உள்ள வறட்சியை போக்கிவிடும்.

ஈரப்பதத்தை தரும். பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்கும்.

தலைமுடி வளர தேங்காய் பால் கண்டிஷனர்:

தேவையான பொருட்கள்:

 1. தேங்காய் பால் – 1/4 கப்
 2. தேன் – 2 டேபிள் ஸ்பூன்
 3. விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1
 4. ரோஸ் வாட்டர் — சில துளிகள்
 5. கிளிசரின் – சில துளிகள்

தலைமுடி வளர தேங்காய் பால் கண்டிஷனர் செய்முறை:

விட்டமின் ஈ கேப்ஸ்யூல் தவிர மேல் கூறப்பட்டுள்ள அனைத்து கலவையையும் ஒன்றாக கலக்க வேண்டும். இறுதியாக விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து அவற்றில் வரும் திரவத்தை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை தலை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து நுனி வரை நன்றாக தேய்த்து விடவும், பின்பு ஒரு பெரிய பாலித்தின் கவரால் முடியை மூட வேண்டும்.

பின்பு 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீரால் கூந்தலை நன்கு அலசவும்.

இது மிகச் சிறந்த கண்டிஷனர். கூந்தல் வளர்ச்சிக்கு(hair adarthiyaga valara tips in tamil) மிகவும் உதவும். வாரம் ஒரு முறை செய்தால் உங்கள் கூந்தலின் அழகை பார்த்து நீங்களே ரசிப்பீர்கள்.

newகூந்தல் பராமரிப்பு முறை..! Hair Tips in Tamil..! Alagu kurippu for hair in tamil

தலைமுடி வளர தேங்காய் பால் பாதாம் எண்ணெய் கலவை:

தேவையான பொருட்கள்:

 1. தேங்காய் பால்-1 டேபிள் ஸ்பூன்
 2. தேன்-1 டேபிள் ஸ்பூன்
 3. பாதாம் எண்ணெய்-சில துளி
 4. ரோஸ் வாட்டர்- சில துளி
 5. பால் – 1 டேபிள் ஸ்பூன்

தலைமுடி வளர தேங்காய் பால் பாதாம் எண்ணெய் கலவை செய்முறை:

தலைமுடி வளர மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும், பின்பு கலந்த கலவையை தலை முடி வேர்ப்பகுதியில் இருந்து நுனி வரை நன்றாக மசாஜ் செய்து 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும்.

பின்பு குளிர்ந்த நீரால் கூந்தலை நன்றாக அலசவும். இந்த முறையை வாரம் தவறாமல் செய்து வந்தால் முடி உதிர்தல், பொடுகு ஆகிய பிரச்சனைகள் நீங்கி, கூந்தல் அழகாய் ஜொலிப்பதை நீங்கள் உணரக் கூடும்.

மேல் கூறப்பட்டுள்ள 3 கண்டிஷனரிலும் புரோட்டின் நிறைந்த பொருட்களை கொண்டு வீட்டில் இருந்து தயாரிப்பதால் கூந்தல் வளரத் தேவையான போஷாக்கினை வேர்க்கால்கள் மூலம் அளிக்கும்.

வறண்ட கூந்தல் பெற்றிருப்பவர்களுக்கு, அரிப்பு, எரிச்சல், முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படாது. கூந்தல் பட்டு போன்று மிளிரும்.

newமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami