கை சுருக்கம் நீங்க | Wrinkles Hands Home Remedy in Tamil
முன்னெல்லாம் வயதாகினால் தான் கை சுருக்கம் பிரச்சனை ஏற்படும். ஆனால் இப்போதெல்லாம் இளம் வயதில் உள்ளவர்களுக்கே கைகளில் சுருக்கம் ஏற்பட்டு தோல் அழகையே கெடுத்துவிடுகிறது. உடல் அழகாய் இருப்பதற்கு காரணியாக இருப்பதே தோல் பகுதிதான். அந்த தோலினை எந்த பாதிப்பும் ஏற்படாமல் அழகாய் வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா.? வாங்க இன்றைய அழகு குறிப்பு பகுதியில் கை சுருக்கம் நீங்க ஒரு சூப்பரான டிப்ஸினை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
முகம் சுருக்கம் நீங்க சில எளிய அழகு குறிப்புகள் ..! |
Kai Surukkam Neenga – தேவையான பொருள்:
- கேரட் – 1
- தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
- தண்ணீர் – சிறிதளவு
டிப்ஸ்: 1 – செய்முறை விளக்கம்:
- முதலில் ஒரு கேரட்டை எடுத்து மேல் உள்ள தோலினை சீவிவிட்டு கேரட்டை சீவிக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு சிறிய கிளாஸ் பாட்டிலில் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொள்ளவும்.
- துருவி வைத்துள்ள 1 டீஸ்பூன் கேரட் துகள்களை தேங்காய் எண்ணெயில் சேர்க்கவும். இப்போது இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.
- அடுத்து தனியாக ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
- கொதிக்கின்ற நீரில் பாட்டிலில் மிக்ஸ் செய்து வைத்துள்ளதை வேக வைத்த நீரில் வைக்கவும்.
- ஐந்து நிமிடம் கழித்து வெளியில் எடுத்துவிடலாம். அடுத்து அந்த ஜாடியை ஒரு இருட்டு அறையில் 2 நிமிடம் வைக்கவும்.
- 2 வாரம் கழித்து கை சுருக்கம் உள்ள இடத்தில் அந்த ஆயிலை தினமும் தடவிவர கை சுருக்க பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கை தோல் சுருக்கம் நீங்க – தேவையான பொருள்:
- பாதாம் – தேவையான அளவு (நறுக்கியது)
- தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
டிப்ஸ்: 2 – செய்முறை விளக்கம்:
- கை சுருக்கம் மறைவதற்கு இரண்டாவது டிப்ஸாக நல்ல தரமான பாதாம் பருப்பினை எடுத்துக்கொண்டு அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- அடுத்து அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு கடாய் வைத்து 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஹீட் செய்யவும்.
- ஹீட் செய்ததும் நறுக்கி வைத்துள்ள பாதாம் பருப்பினை அதில் சேர்த்து லைட் பிரவுன் கலருக்கு வரும்வரை கிண்டிவிடவும்.
- இப்போது அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கூல் செய்யவும்.
- அடுத்து தனியாக ஒரு பாட்டிலில் அந்த எண்ணெயை மட்டும் வடிகட்டி கொள்ளவும்.
- இந்த எண்ணெயை 1 மாதத்திற்கு ஸ்டோர் படுத்தி வைக்கவும். அதன் பிறகு கை சுருக்கம் உள்ள இடங்களில் மசாஜ் செய்து இரவு நேரத்தில் அகற்றிவிட்டால் கை சுருக்கம் மறைந்துவிடும். இந்த டிப்ஸை தினமும் செய்து வந்தால் இளமையான கை தோற்றம் கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க..
Wrinkles Hands Home Remedy in Tamil – தேவையான பொருள்:
- கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
டிப்ஸ்: 3 – செய்முறை விளக்கம்:
- முதலில் 1 டீஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை ஒரு பாட்டிலில் எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து அந்த ஜெல்லில் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை அளவிற்கு சேர்த்து மிக்ஸ் பண்ணிக்கொள்ளவும்.
- தயார் செய்து வைத்துள்ள இந்த ஜெல்லினை கை சுருக்கம் உள்ள அனைத்து பகுதியிலும் நன்றாக அப்ளை செய்யவும்.
- இதில் அதிகமாக விட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் அடங்கியுள்ளதால் சாஃப்டான தோல் பகுதி நமக்கு கிடைக்கும்.
- கைகளில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகளை தடுத்து வளவளப்பான தோலினை கொடுக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |