சாரி வகைகள் | Saree Types in Tamil

Saree Kattum Murai

புடவை வகைகள் | Saree Kattum Murai

நண்பர்களுக்கு வணக்கம் பெண்கள் பெரிதும் விரும்பி அணியும் புடவை வகைகள் பற்றித்தான் படித்து தெரிந்து கொள்ளப் போகிறோம். பெண்களுக்கு பாவாடை சட்டை, சுடிதார் போன்ற உடைகளை அணிவதை விட தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான சேலை அணிந்தால் பெண்களுக்கு தனி அழகுதான். சில பெண்களுக்கு சேலை என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு சிலருக்கு அந்த அளவிற்கு சேலையானது பிடிக்காது. புடவைகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும், புடவை அணியும் போது நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை, புடவைகளின் வகைகள், உயரமாக உள்ளவர்கள் மற்றும் குள்ளமாக உள்ளவர்கள் எது மாதிரியான சேலைகளை அணிந்தால் எடுக்கும் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

புடவை கனவில் வந்தால் என்ன பலன்

சாரி வகைகள்:

சாரி வகைகள்

புடவை வகைகள்
பட்டுகைத்தறி
சிபான்பனாரஸ்
போச்சம் பள்ளிகாட்டன்
டிசைனர் எம்ப்ராய்டரிடிசைனர் பார்ட்வேர்
டிசைனர் திருமண புடவைகள்டிசைனர் லெஹங்கா
ஹாஃப் ஆம்ப்ஹாஃப் டிஷ்யு
ப்ரேசோநெட்டட்
ஜெக்கார்ட் வேலைப்பாடுஷிபான்
ஜார்ஜ்ஜெட்டெனிம்

சேலைகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும்:

 saree types in tamil

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

நாம் ஜவுளி கடைக்குள் நுழையும் வரை இருக்கும் மனப்பான்மை விற்பனையாளர் சேலையை எடுக்கும் வரைதான் இருக்கும். இந்த சேலையை எடுப்போமா அந்த சேலையை எடுப்போமா என்று குழப்பத்திலே இருப்போம். நாம் கொடுக்கும் பணத்திற்கு இந்த சேலை ஒர்த்தாக உள்ளதா? அந்த சேலை நாம் கட்டிய பிறகு நமக்கு எடுப்பாக இருக்குமா? துணியின் தரம் இது போன்ற விஷயங்களை பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

சேலையின் தரம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதைப் போலவே தேர்வு செய்யும் புடவையும், எந்த விஷேசத்துக்குக் கட்டப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு தேர்வு செய்தலும் நலம்.

குறிப்பாக நம்முடைய உடல் நிறத்திற்கேற்ப புடவையை தேர்வு செய்ய வேண்டும். கடையில் ஒரு சேலையை எடுத்தப்பிறகு இந்த புடவை மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதில் முதலில் உங்களுக்குள் நம்பிக்கை கொள்ளுங்கள். பின், வீட்டில் வந்து பார்த்தாலும், யார் எதைச் சொன்னாலும், கவலைப்படாமல் இருக்கலாம்.

எம்பிராய்டரி பிளவுஸ் டிசைன்

சேலை கட்டும் முன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

 saree kattum murai

பெண்கள் அணியும் புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றி அமைக்கக்கூடியது. சேலையில் இருக்கும் டிசைன் சாதாரணமான அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் நீங்கள் நினைக்கக்கூடாது. புடவையை திட்டமிட்டு தேர்ந்தெடுத்து அணிந்தால் பெண்களின உருவ அமைப்பு நன்றாக இருக்கும். சில சேலைகளில் உள்பக்கம், வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்க வேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்ற பக்கம் மங்கலாக இருக்கும். இதனை கவனித்து கொள்ளவும்.

சேலையின் ஒரு முனையில் முந்தானையும் மறுமுனையில் சில சேலைகளில் தைப்பதற்கான ப்ளவுஸ் துணியும் இருக்கும். ப்ளவுஸ் தைப்பதற்கான துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் அதிகமாக இருக்கும். கட்டுவதற்கும் சேலை மொத்தமாக இருக்கும். புதிய சேலை அணிவதற்கு முன் அதனை மிதமான சூட்டில் முதலில் தேய்த்து கொள்ளுங்கள். இது மடிப்பை சரியாக பிளீட் செய்ய உதவி செய்யும்.

உயரமானவர்களுக்கு சேலை அணியும் முறை:

 saree kattum murai

உடல் சற்று பருமனாக இருந்தால் அவர்களுக்கு திக்கான கலர் சேலை பொருத்தமாக இருக்கும்.

மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் எடுப்பாக இருக்காது. அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.

உடல் கொஞ்சம் பருமனானவர்களுக்கு மெல்லிசான உடைகளை தவிர்க்க வேண்டும்.  உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.

பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.

பிரின்டட் புடவைகளை அணியும் போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் தைத்து போடுங்கள். அகலமான பார்டர் வைத்த புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும். பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.

நியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2021

குள்ளமானவர்களுக்கு புடவை கட்டும் முறை:

 புடவை வகைகள்

உயரம் குறைவாக உள்ளவர்களுக்கு டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு தரும். தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது. காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் போன்ற புடவை வகைகளைத் தவிர்க்கவும். முயன்றவரை பிளெய்ன் சாரி, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள உடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம். சேலையில் சாய்வான கோடுகள் இருந்தால் அந்த சேலையை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.

ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும். சிறிய சிறிய  பூக்கள் உள்ள டிசைன்கள் எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.

உடல் பருமனாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் சேலை அணியாதீர்கள். அது மாதிரி உடுத்தும்போது உடலை குண்டாக காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும்.

சேலையை எப்படி பாதுகாக்க வேண்டும்:

 saree kattum murai in tamil

விலை அதிகம் உள்ள புடவையோ, வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும். இதனால் புடவையின் ஓரங்கள் பாதுகாக்கப்படும். அணிந்து விட்டு  கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தக் கூடும். விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போகவும் வாய்ப்புண்டு.

உணவு சாப்பிடும் போது அதிக கவனம் வேண்டும். ஏதேனும் சேலையில் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும். டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும். ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்டி வைக்கவும். நூல் மற்றும் ஜமிக்கியால் ஆன சேலைகளை சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.

சில நேரம் ஜாக்கெட்டின் உட்புறத்தில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து குறிப்பிட்டப் பகுதியில் துடைத்தால் கறை மறையும். புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்து கொள்ளலாம். பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும். இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்.

மாடல் பிளவுஸ் டிசைன்கள் 2021 | Back Neck Designs 

ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை வெள்ளை காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் உருண்டகளைப் பயன்படுத்த வேண்டாம். உடையின் மேல் வாசனை திரவியங்களையும் தெளிக்கக் கூடாது. அது புடவையில் கறை உண்டாக்கும். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும்.
அதே போல நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக் கூடாது.

விலை உயர்ந்த உடைகளை வைக்கும் வார்ட்ரோபில் பூச்சிகளை விரட்ட ஒரு துணியில் ஓடோனில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது வார்ட்ரோபின் வாசனையை தரும். ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் சேலையில் உள்ள ஜரிகை கறுத்து போக வாய்ப்புள்ளது. பர்ஃப்யூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com