ஈர், பேன், பொடுகு தொல்லை நீங்க இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள் 100% ரிசல்ட் கிடைக்கும்.

பேன் தொல்லைக்கு தீர்வு

அனைவருக்கும் தலை முடி பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் தலையில் உள்ள ஈர் பேன், பொடுகு பிரச்சனை வந்து கொண்டு தான் உள்ளது. அதனை தீர்க்க நாமும் நிறைய ஷாம்பு போட்டு குளித்துவிட்டோம்.  இருந்தாலும் அது உங்களை வீட்டு போகவே போகாது.

இந்த மூன்று பிரச்சனைக்கும் ஒரு தீர்வாக இந்த பதிவு இருக்கும். நீங்கள் முதலில் நிறைய வகையான ஷாம்புக்களை போட்டும் குளிப்பதை நிறுத்த வேண்டும். ஒரே  மாதிரியாக செய்தால் போதும் தலை முடி பிரச்சனையும் வராது பொடுகு பிரச்சனையும் வராது. வாங்க அது அனைத்திற்க்கும் ஒரே தீர்வாக இதை செய்யுங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

பேன் ஈர் தொல்லை நீங்க:

தேவையான பொருட்கள்: 

  • வீட்டில் இருக்கக்கூடிய தேங்காய் எண்ணெய்
  • 7 பல் பூண்டு (உரித்தது)
  • 1 கைப்பிடி புதினா இலை

ஸ்டேப்:1

 pen thollai neenga

முதலில் பூண்டை தனியாக எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அடுத்து எடுத்து வைத்த பூண்டை அரைக்காமல் இடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

 பேன் ஈர் தொல்லை நீங்க

அடுத்து அதேமாதிரி புதினா இலைகளை கழிவிக்கொண்டு அதனையும் சின்ன உலக்கையை வைத்து இடித்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

 podugu poga tips in tamil

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றவும். தேங்காய் எண்ணெயை விட வேப்ப எண்ணெயை ஊற்றுவது மிகவும் சிறந்து.

இதையும் படியுங்கள் ⇒ பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு எந்த வித இயற்கை குறிப்புகளையும் அப்ளை செய்ய தேவையில்லை.! இதை மட்டும் பண்ணுங்க ..!

ஸ்டேப்: 5

 podugu poga tips in tamil

அது சூடானதும் அதில் இடித்து வைத்த பூண்டு, புதினாவை சேர்க்கவும். அது 5 நிமிடம் மட்டும் சூடு செய்தால் மட்டும் போதும் அடுப்பை அணைத்து விட்டு தனியாக ஆறவைக்கவும்.

ஸ்டேப்: 6

 ஈர் தொல்லை நீங்க

ஆறியதும் அதனை எடுத்து அப்படியே தலையில் தேய்க்கவும், இப்படி தேய்ப்பதால் பொடுகு பிரச்சனை வராது. இதனை வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம்.

முக்கியமாக அதனை தேய்க்கும் போது முடியின் வேர்வரை தேய்க்கவும். அதன் பின் காயவைத்து ஷாம்பு போட்டு குளித்துவிடவும்.

பின்பு தலையை காயவைத்து பேன் சீப்பு போட்டு சீவினால் அனைத்து பேன்களும் வந்து விடும்.

இதனை வாரத்தில் 1 முறை செய்து வாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும். பூண்டுக்கும், புதினா நறுமணத்திற்கு பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பொடுகுக்கு இந்த ஹேர் பேக் அப்ளை பண்ணுங்க 100% ரிசல்ட்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil