முகம் பளபளப்பாக 7 நாட்கள் இந்த மாதிரி செய்தால் போதும்

Face Glow Tips At Home in tamil

முகம் பளபளப்பாக இருக்க | Face Glow Tips At Home 

ஆண்களாக இருந்தாலும் சரி,பெண்களாக இருந்தாலும் சரி முகம் எப்பொழுதும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். இதற்காக பார்லருக்கு சென்று Face Pack போடுவார்கள். ஆனால் இந்த முறை நிரந்தரமாக முகத்தை பளபளப்பாக்குமா என்பது சந்தேகம் தான். அதனால் இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தொடர்ந்து 7 நாட்கள் இந்த பதிவில் கூறியுள்ளது போல் செய்து வந்தால் முகத்தை பளபளப்பாக்க முடியும். அதனில் முழு பதிவையும் தொடர்ந்து படியுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Get Glowing Skin in 7 Days in Tamil

DAY:1

Face Glow Tips At Home in tamil

முதலில் பச்சை பாலை எடுத்து அதில் காட்டன் துணியை வைத்து பாலில் நனைத்து முகத்தில் மசாஜ் செய்யவும்.

இரண்டாவதாக ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்யவும்.

மூன்றாவதாக 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1/2 தேக்கரண்டி பாதாம் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவி விடவும்.

DAY:2

Face Glow Tips At Home in tamil

இரண்டாவது நாள் நன்றாக சாப்பிட வேண்டும். காலையில் ஏதவாது ஒரு பழத்தை எடுத்து கொள்ளவும். பாதாமை இரவு ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் தோலை உரித்து விட்டு சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒  முக சுருக்கம் இல்லாமல், முகத்தை பளபளப்பாக வைத்திருக்க தயிரை எப்படி பயன்படுத்துவது..?

DAY:3

முகம் பளபளப்பாக இருக்க

ஒரு கிண்ணத்தில் பாதி வாழைப்பழம், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி சீனி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

DAY:4

முகம் பளபளப்பாக இருக்க

நான்காவது நாள் கேரட்டை சாப்பிட வேண்டும். இதனால் கண்ணிற்கு நல்லது. வெள்ளரிக்காயை அரைத்து அதிலிருந்து சாறாக எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை காட்டன் துணியால் நனைத்து கண்ணை சுற்றிலும் அப்ளை செய்யவும். இது போல் செய்வதினால் கருவளையம் வராமல் தடுக்கலாம்.

DAY:5

முகம் பளபளப்பாக இருக்க

ஒரு கிண்ணத்தில் முல்தானி  மெட்டி 2 தேக்கரண்டி, சிறிதளவு ஆரஞ்சு சாறு, பால் பவுடர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்யவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடவும்.

DAY:6

முகம் பளபளப்பாக இருக்க

ஒரு பவுலில் கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய், லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடலாம்.

DAY:7 

முகம் பளபளப்பாக இருக்க

8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். இது ஏழாவது நாள் மட்டுமில்லை தினமும் கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள போல் 7 நாட்கள் செய்து வாருங்கள். எட்டாவது நாள் முகம் பளபளப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ கற்றாழை போதும் நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை அப்ளை செய்யுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil