Adarthiyaga Mudi Valara Tips
நண்பர்களே வணக்கம் இன்றைய அழகு குறிப்பு பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக முடி வளருவதற்கு நிறைய டிப்ஸை பயன்படுத்திருப்பீர்கள். ஆனால் அது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுத்ததா என்பதை கேட்கவில்லை ஆனால் இந்த டிப்ஸை செய்தால் நிச்சயம் உங்களுடைய தலை முடி அடர்த்தியாக வளரும். தினமும் முகத்திற்கும், தலை முடி பிரச்சனைக்கு நிறைய தீர்வுகளை செய்து வருகிறோம். இன்று நாம் தெரிந்துகொள்ள போகிறது அருமையாக ஒரு மருந்தாக இருக்க போகிறது வாங்க தெரிந்துகொள்ளலாம்..!
முடி கருப்பாக அடர்த்தியாக வளர:
பொதுவாக இந்த பொருட்கள் இரண்டும் வீட்டில் இல்லாமல் இருக்காது ஆகவே தேவையில்லாமல் காசு செலவு செய்ய வேண்டாம்.
டிப்ஸ்: 1
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும். பின்பு ஒரு வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு வெட்டி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
பின்பு அதனை எடுத்து மிக்சி ஜாரில் போட்டுகொள்ளவும் அதனுடன் 1 டீஸ்பூன் கிராம்பை போட்டு தண்ணீர் இல்லாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
டிப்ஸ்: 2
அடுத்தது அடுப்பை பற்றவைத்து 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றிவிடவும். பின்பு அந்த தண்ணீர் கொதித்தவுடன் அரைத்துவைத்திருந்த விழுதை அதில் சேர்த்து கொதிக்கவிடவும்.
டிப்ஸ்: 3
பின்பு அந்த அரைத்த வைத்திருந்த சாறு அனைத்தும் அந்த தண்ணீரில் சேர்த்துவிடும், அதன் பின் அடுப்பை அணைத்து விடவும்
டிப்ஸ்: 4
அந்த தண்ணீர் ஆறிய உடன் அதனை நன்றாக வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைக்கவும்.
டிப்ஸ்: 5
இதனை நீங்கள் பிரிஜியில் 7 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். ஒரு வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் தலை குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள் அப்போது தலை குளிப்பதற்கு முன் இந்த தண்ணீரை தலை தெளித்து மசாஜ் செய்துகொள்ளவும். இதை தொடர்ந்து 3 மாதம் செய்து வர வேண்டும். அதன் பின் உங்கள் முடி எப்படி வளர்கிறது என்று.
6 பொருள் போதும் ஒரே வாரத்தில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! இயற்கை ஹேர் டை..!
முடி அடர்த்தியாக வளர ஜூஸ்:
- கருவேப்பிலை – 1 கைப்பிடி
- 3 ஸ்பூன் – தயிர்
- சீரகம் –1/2
- இஞ்சி – 1/2 இஞ்சி
- உப்பு சுவைக்கேற்ப
இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து மிக்சி ஜாரில் அரைத்துக்கொள்ளவும். அரைத்த பின் அதில் உப்பு சேர்த்து கொள்ளவும்
அதனை வடிகட்டி குடிக்கலாம் அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் அப்படியேகூட குடிக்கலாம்.
இதை காலையிலும் டீ காபி குடிப்பதற்கு முன் குடிக்கலாம் அதேபோல் மாலையிலும் குடிக்கலாம். அதில் ஒரு தவறும் இல்லை. முடி அடர்த்தியாக வளரும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |