வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த ஒரு எண்ணெயை மட்டும் தலையில் தடவுங்க முடி காடு போல் வளரும்..!

Updated On: January 17, 2023 7:54 AM
Follow Us:
aloe vera gel for hair growth in tamil
---Advertisement---
Advertisement

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க | Hair Growth Aloe Vera 

முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு மற்றும் எண்ணெய்களை பயன்படுத்துகின்றனர். இது நாளடைவில் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் முடி பிரச்சனைக்கும் சரி, முக அழகிற்கும் சரி இயற்கையான முறையில் சரி செய்வதே சிறந்தது. இந்த முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு கற்றாழை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Aloe Vera Gel For Hair in Tamil:

கற்றாழையை வைத்து எண்ணெய் தயாரித்து தலையில் அப்ளை செய்வதால்  முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும், முடி உதிராமல் இருப்பதற்கும் உதவுகிறது. மேலும் புதிய முடி வளர்வதற்கும் உதவி செய்கிறது.

Hair Growth Aloe Vera 

1 கற்றாழையை எடுத்து சின்ன சின்னதாக நறுக்கி எடுத்து கொள்ளவும். நறுக்கும் போது மஞ்ச கலரில் ஜெல் வரும் அதனை நன்கு கழுவி சுத்தமாக எடுத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாய் எடுத்து அதில் 1/2 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அதில் நறுக்கி வைத்த கற்றாழையை சேர்த்து கொதிக்க விடவும். முக்கியமாக குறைந்த தீயிலே வைத்து 2 அல்லது 3 நிமிடங்களுக்கு சூடுபடுத்தவும். ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் நண்பர்களே கற்றாழையை ரொம்ப கொதிக்க விட கூடாது. ரொம்ப கொதித்தால் அதில் உள்ள சத்துக்கள் கிடைக்காது.

இதையும் படியுங்கள் ⇒ 100 % இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு ஹேர் டை..!

கடாயில் கொதிக்க வைத்த கற்றாழை ஆறியதும் வடிக்கட்டி ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இதில் வைட்டமின் இ மாத்திரையை கலந்து கொள்ளவும்.

இந்த கற்றாழை ஜெல்லை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 2 மணி நேரம் தலையில் அப்படியே ஊறட்டும். பிறகு தலையை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி கொள்ளவும்.

இதை வாரத்தில் 2 அல்லது 3 தடவை அப்ளை செய்தால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்.!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now