முடி அதிகமா கொட்டுதா அப்போ இந்த எண்ணெயை தடவுங்க முடி காடுபோல வளரும்..!

aloe vera hair oil at home in tamil

Aloe Vera Hair Oil Homemade

அனைத்து பெண்களுக்குமே முடி நீளமாக இருக்க வேண்டும் என்ற ஆசை  இருக்கும். முடி நீளமாக வளர வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் முடிக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டு முடி அதிகமாக கொட்ட ஆரம்பிக்கிறது. அதனால் கெமிக்கல் நிறைந்த பொருட்கள் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஆரோக்கியமான முறையில் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. கற்றாழை – 5
  2. தேங்காய் எண்ணெய் – 100 ml 
  3. மிளகு – 10
  4. இஞ்சி – 1 துண்டு

கற்றாழை ஜெல்:

கற்றாழை ஜெல்

முதலில் 5 கற்றாழையை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் இருந்து வரும் மஞ்சள் நிற ஜெல்லை நீக்கிவிட வேண்டும்.

அடுத்து கற்றாழை தோலை சீவி அதில் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும்.

 கற்றாழை சேர்ப்பதால் முடி உதிர்வு இருக்காது. முடி அடர்த்தியாகவும் வழவழப்பாகவும் இருக்கும். கற்றாழை ஜெல்லில் இருக்கும் சத்துக்கள் பொடுகு தொல்லை வராமல் தடுக்கிறது.  
முடி நீளமாக வளர்கிறது ஆனால் ஒள்ளியாகவே உள்ளது..! வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!

இஞ்சி தோலை நீக்கவும்: 

இஞ்சி தோலை நீக்கவும்

பின் ஒரு துண்டு இஞ்சியை எடுத்து கொள்ள வேண்டும். அதன் தோலை நீக்கிவிட்டு அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

 இஞ்சி சேர்த்து கொள்வதால் முடியின் வேர்க் கால்களில் இருக்கும் தங்கியிருக்கும் பொடுகு மற்றும் இறந்த செல்கள் எல்லாவற்றையும் சரிசெய்யும். தலையில் ஏற்படும் அரிப்பை சரி செய்யும். இஞ்சி முடிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.  

மிக்சி ஜாரில் சேர்க்கவும்: 

அடுத்து நாம் தயார் செய்து வைத்துள்ள கற்றாழை ஜெல் மற்றும் இஞ்சியை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ள வேண்டும்.

வாரம் வாரம் இதை செய்து வந்தால் உங்கள் முடி ஒரு மாதத்திற்குள் 2 CM முடி அதிகமாக வளர்ந்திருக்கும்..!

எண்ணெய் தயாரிக்கும் முறை: 

எண்ணெய் தயாரிக்கும் முறை

ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 100 ml தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

எண்ணெய் சூடாவதற்கு முன்னரே நாம் அரைத்து வைத்துள்ள கற்றாழை, இஞ்சி சாறை சேர்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் எண்ணெய் தெரிக்காமல் இருக்கும்.

அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்து கொள்ள வேண்டும். பின் அடுப்பை குறைத்து வைத்து எண்ணெயை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

எண்ணெய் கொதிப்பது அடங்கியதும் அடுப்பை அணைக்க வேண்டும். பின் எண்ணெய்யை ஆறவிட்டு வடிகட்ட வேண்டும். இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை நீங்கள் தினமும் தலையில் தடவி வரலாம். இந்த எண்ணெய் தடவுவதால் பொடுகு வராமல் இருக்கும். முடி உதிர்வு நின்று முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

இதனையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வாரம் 1 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடியை அடர்த்தியாகவும் மற்றும் கருப்பாகவும் இருக்க செய்யும்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil