சமையலுக்கு பயன்படுத்தும் இந்த 1 பொருளை வைத்து முகத்தை வெள்ளையாக மாற்றலாம் எப்படி தெரியுமா..?

Advertisement

இயற்கையாக முகம் வெள்ளையாக

ஹாய் ப்ரெண்ட்ஸ்..! வெள்ளையாக இருக்கும் முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கவும் மற்றும் முகம் வெள்ளையாக இருக்க எவ்ளோ ட்ரை பண்றது என்று நினைக்கும் இரண்டு வகையான நண்பர்களுக்கும் இன்றைய அழகுக்குறிப்பு பதிவு உதவியானதாக இருக்கும். இனி நீங்கள் பார்லருக்கு செல்லாமல் செலவு செய்யாமல் உங்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் 1 பொருளை வைத்து முகத்தை வெள்ளையாக சிவப்பாக மாற்றலாம். சரி வாங்க நண்பர்களே இன்றைய பதிவை தொடர்ந்து படித்து முகத்தை அழகாக மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ 15 நாட்களில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முடி நீளமாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்..!

முகம் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்:

முகம் வெள்ளையாக மாற முதலில் ஒரு கிரீம் தயார் செய்ய வேண்டும். கிரீம் தயார் செய்வது எப்படி என்று கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  1. பீட்ரூட்- 1/2
  2. கான்பிளவர் பவுடர்- 1
  3. கற்றாழை- சிறிய துண்டு

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு பீட்ரூட் மேல் உள்ள தோலை சீவிக் கொண்டு. பின்பு பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து அதிலிருந்து சாறு பிழிந்து தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்தாக கற்றாழையை எடுத்துக்கொண்டு சுத்தமான தண்ணீரில் அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு கற்றாழையில் இருந்து 2 ஸ்பூன் அலோவேரா ஜெல் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் கான்பிளவர் மாவு மற்றும் பீட்ரூட் சாறு இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து கலந்து வைத்துள்ள சாறை அதில் ஊற்றி நன்றாக கிண்டி கொண்டே இருங்கள். 5 நிமிடம் களித்து கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி விடுங்கள்.

ஸ்டேப்- 5

கடைசியாக அடுப்பில் சூடு படுத்தி வைத்துள்ள பொருளுடன் தேன் 1 ஸ்பூன் மற்றும் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அவ்வளவு தான் உங்களுடைய முகத்திற்கு கிரீம் தயார்.

ஸ்டேப்- 6

10 நிமிடம் களித்து இந்த தயார் செய்த கிரீமை முகத்தில் நன்றாக மசாஜ் செய்வது போல அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு 10 நிமிடம் களித்து முகத்தை கழுவி விடுங்கள்.

இது மாதிரி ஒரு வாரம் செய்தால் உங்களுடைய முகம் வெள்ளையாக மாறி இருப்பதை நீங்களே பார்ப்பீர்கள்.

இதையும் படியுங்கள் என்றென்றும் முகம் இளமையாக அப்படியே இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள்…!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 

 

 

Advertisement