கேரட் முகத்தில்
முகத்தை அழகுபடுத்த பல முறைகளில் ட்ரை செய்திருப்பீர்கள். நீங்கள் செய்த எல்லா குறிப்புகளும் செட் ஆவதில்லை. காரணம் ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு தன்மை உடையது. நீங்கள் இதுவரைக்கும் பழங்கள் வைத்து முகத்தை ஆழகுபடுத்துருப்பீர்கள். ஆனால் வீட்டில் சமையலுக்கு உதவும் காயை வைத்து முகத்தை அழகுபடுத்துவீர்களா..! இல்லையென்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ இந்த டிப்ஸை Follow பண்ணா ஒரே வாரத்தில் கலர் ஆகலாம்..!
பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- கேரட் –02
- தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர்
செய்முறை:
முதலில் 02 கேரட்டை எடுத்து சீவி கொள்ளுங்கள். சீவிய கேரட்டை நிழலிலே காய வைக்க வேண்டும். தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் நன்றாக காய வைக்க வேண்டும். பின் காய்ந்த கேரட்டை மிக்சியில் சேர்த்து அரைத்து பவுடராக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பை பற்ற வைக்கவும். அதில் ஒரு கனமான பாத்திரத்தை வைக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதித்த பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த பவுடரை சேர்த்து கலக்கவும்.
இப்போது கலந்து வைத்த எண்ணெய் பாத்திரத்தை கொதிக்கும் தண்ணீரில் வைக்க வேண்டும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பில் இருக்கட்டும். பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இந்த எண்ணெய் ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கட்டும். பிறகு இந்த எண்ணையை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும். இந்த எண்ணெய் ஒரு மாதம் வரைக்கும் கெட்டு போகாமல் இருக்கும்.
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணையை தினமும் முகத்தில் தடவலாம். இந்த எண்ணையை தடவி 20 நிமிடம் வரை முகத்தில் அப்படியே இருக்கட்டும். பிறகு முகத்தை கழுவி கொள்ளலாம். உங்களுக்கு பகலில் நேரம் இல்லையென்றால் இரவு தூங்குவதற்கு முன்பு கூட இந்த எண்ணையை முகத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்திருங்கள். பிறகு முகத்தை கழுவிட்டு தூங்கலாம்.
இது போல் தொடர்ந்து 1 மாதம் வரை இந்த எண்ணெயை அப்பளை செய்து வாருங்கள். விரைவிலே உங்கள் முகம் அழகாக மாறுவதை காணலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |