வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்தினால் முடி காடுபோல் வளரும்..!

Updated On: September 6, 2024 1:17 PM
Follow Us:
Castor Oil for Hair in Tamil
---Advertisement---
Advertisement

தலைமுடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் – Castor Oil for Hair in Tamil

விளக்கெண்ணெய் முடி வளர்ச்சியை அதிகரிக்க மிகவும் உதவி செய்கிறது. விளக்கெண்ணெயை பயன்படுத்தி தலைக்கு மசாஜ் செய்யும் போது முடி வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் விளக்கெண்ணெய் உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும், ஆக உடல் சூட்டையும் குறைக்க உதவுகிறது. இந்த விளக்கெண்ணெயை நேரடியாக தலை முடிக்கு பயன்படுத்தினால் அது உடலுக்கு சில ஆரோக்கிய பிரச்சனையை ஏற்படுத்தும். ஆக நாம் விளக்கெண்ணெயுடன் சில எண்ணெயை கலந்து தலைக்கு உபயோகித்தோம் என்றால் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது. சரி வாங்க முடி வளர்ச்சியை அதிகரிக்க விளக்கெண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டிய பொருட்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

வழுக்கை தலையில் முடி வளர – Bald Spots Treatment in Tamil – Vilakkennai for Hair in Tamil:

  • ஆலிவ் ஆயில் – மூன்று ஸ்பூன்
  • விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • Peppermint Essential Oil – இரண்டு சொட்டு

மேல் கூறப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் அப்ளை செய்து 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடிகளை வளர செய்யும். இதனை நீங்கள் கூந்தல் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் அல்லது 15 நிமிடம் கழித்து தலை அலசலாம். இந்த டிப்ஸை தொடர்ந்து செய்து வர வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் புதிய முடிகளை வளர செய்யும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி நீளமா அடர்த்தியா வளர தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு எண்ணெய் சேர்த்து தலையில் தடவி போதும்!

முடி வளர்ச்சியை அதிகரிக்க – Hair Growth Tips in Tamil:castor oil for hair in tamil

  • வேப்பிலை பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
  • விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • Tea Tree Oil – இரண்டு சொட்டு

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். மிக்ஸியில் சேர்த்து கூட ஒரு முறை அரைத்து எடுத்துக்கொள்ளலாம். பிறகு இந்த கலவையை தலையில் அப்ளை செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடம் காத்திருந்து தலை அலசலாம். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

முடி சாப்டாக சைனிங்காக இருக்க – Shiny Hair Tips in Tamil:

shiny hair tips in tamil

ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கவும். பின் டபிள் பாயிலிங் முறையில் எண்ணெயை சூடுபடுத்த வேண்டும். அதாவது ஒரு பெரிய பவுலில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றவும், பின் அந்த தண்ணீரில் கலந்து வைத்துள்ள எண்ணெயை 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.

பின் மிதமான சூட்டில் எண்ணெயை தலையில் அப்ளை செய்து, 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின் சூடான நீரில் ஒரு டவலை நனைத்து, நன்றாக பிளிந்துகொள்ளவும். பிறகு அந்த டவலை தலையில் கட்டிக்கொள்ளுங்கள். டவலில் உள்ள சூடு ஆறும் வரை தலையில் அந்த டவல் இருக்கட்டும். பிறகு எப்போதும் போல தலை அலசவும். இவ்வாறு செய்வதினால் தலை முடி மிகவும் சாப்டாக மற்றும் சைனிங்காக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கூந்தல் நீளமாக கருமையாக வளர தினமும் இந்த தேய்காய் எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்கள்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை