முடி உதிர்வை தடுக்க தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்

Advertisement

முடி உதிர்வதை தடுக்க எண்ணெய்

தற்போது ஆண்கள், பெண்கள் எல்லாரும் சந்திக்க கூடிய பிரச்சனை முடி உதிர்வு. முடி உதிர்வை தடுப்பதற்கு பல முயற்சிகள் எடுத்து ஒன்றுமே பயனளிக்கவில்லை  என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். முடி உதிராமால் இருப்பதற்கு அதை வாங்குங்கள், இதை வாங்குங்கள் என்று பதிவிடவில்லை. நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை வைத்து முடி உதிராமல் எப்படி பாதுகாப்பது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ ஏழு நாட்களில் தலையில் இருக்கும் பேன், ஈறு போக டிப்ஸ்

முடி உதிர்வதை தடுக்க எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:

  •  தேங்காய் எண்ணெய் -2 கப்
  •  எள் எண்ணெய்- 1/2
  •  விளக்கெண்ணெய் -1/2 கப்
  • கறிவேப்பிலை- 1 கைப்பிடி
  • நெல்லிக்காய் -1
  • வெந்தயம்- 1 தேக்கரண்டி
  • செம்பருத்தி மலர்கள் -3
  • செம்பருத்தி இலைகள்- 1கைப்பிடி

எண்ணெய் செய்வது எப்படி.?

முதலில் அடுப்பை பத்த வைக்க வேண்டும். அதில் கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடாகியதும் தேங்காய் எண்ணெய் 2 கப், எள் எண்ணெய் 1/2 கப், விளக்கெண்ணெய் 1/2 கப், கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, வெந்தயம் ஒரு தேக்கரண்டி, செம்பருத்தி பூ 3, செம்பருத்தி இலைகள் 1 கைப்பிடி போன்றவை சேர்க்கவும்.

மிதமான தீயிலே வைக்கவும். சேர்த்த பொருட்கள் கருமையாகும் வரை அடுப்பில் இருக்க வேண்டும். கருமை நிறம் வந்ததும் அடுப்பை அனைத்து விட வேண்டும்.

பிறகு எண்ணெய் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஸ்டார் செய்து வைக்கவும்.

அப்ளை செய்வது எப்படி.? 

இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு தடவை அப்ளை செய்யலாம். தினமும் கூட நீங்கள் தேங்காய் எண்ணெய் தடவுவது போல் தினமும் தடவி கொள்ளலாம். எந்த பிரச்சனையும் ஏற்படாது.

முடி உதிர்வதற்கு காரணம் என்ன.?

முடி உதிர்வது நீங்கள் நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தாலும் முடி கொட்டும்.

நீங்கள் உடல் நிலை குறைவால் மாத்திரை, மருந்துகள் எடுத்து கொண்டாலும் முடி உதிர்வு ஏற்படும்.

தலையில் பொடுகு பிரச்சனை இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படலாம்.

தலை குளித்த பிறகு தலையை ஈரத்தோடு பின்னினாலும் முடி கொட்டும்.

உங்களது உடலில் வெப்ப நிலை அதிகமாக இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும்.

உங்களது உடலில் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் முடி உதிரும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement