கருவேப்பிலையில் இந்த எண்ணெயை கலந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்

Advertisement

curry leaves for white hair

அனைவரும் முடிக்கு கவனம் செலுத்தி வருகின்றனர். இருந்தாலும் நரை முடி பிரச்சனை பாதிக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் உணவு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளினால் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் டையை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த டை அவ்வப்போது முடியை கருப்பாக மாற்றினாலும் கண் மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற  வேண்டுமென்றால் இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பது நல்லது. அதனால் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Use of Curry Leaves For White Hair in Tamil:

கருவேப்பிலை:

Use of Curry Leaves For White Hair in Tamil

 கறிவேப்பிலையில் வைட்டமின் பி நிறைந்துள்ளது முடியில் உள்ள நிறமி மெலமைனை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் முடி  நரைப்பதையும் தடுக்கிறது. இது பீட்டா-கெரட்டின் நிறைந்துள்ளதால் முடி உதிர்வை தடுக்கிறது. 

அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் 100 தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின் அதில் ஒரு கப் கருவேப்பிலையை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து கருவேப்பிலை எண்ணெயில் இறங்கி நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு  எண்ணெயை வடிக்கட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை தலை முடி முழுவதும் தடவி மசாஜ் செய்யவும். இல்லையென்றால் இரவு முழுவதும் வைத்திருந்து  காலையில் எழுந்து குளித்து விடலாம்.

முடி உதிர்வு பிரச்சனைக்கு நல்ல Result கிடைக்க இதை Follow பண்ணி பாருங்களன்..!

கருவேப்பிலை மற்றும் தயிர்:

Use of Curry Leaves For White Hair in Tamil

கருவேப்பிலை உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். அரைத்த கருவேப்பிலையுடன் தயிர் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை அப்ளை செய்து தலை குளித்து விடவும்.

நரை முடி வராமல் தடுக்க:

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

தினமும் பச்சை காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும்.

முட்டை மற்றும் அசைவம் சாப்பிட வேண்டும்.

புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மன அழுத்தம் ஏற்பட்டால் இசை கேட்பது இல்லையென்றால் மனதிற்கு பிடித்ததை செய்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்து விடவும்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement