அழகுக்கு அழகு சேர்க்கும் எளிமையான குறிப்புகள் | Daily Skin Care Tips in Tamil

Advertisement

முகத்தை பராமரிக்க தினமும் செய்ய வேண்டியவை | Daily Face Care Tips in Tamil

முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? உங்கள் சருமத்தை பராமரிக்க இந்த பதிவில் இருக்கும் குறிப்புகளே உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் சொல்ல போகும் இந்த குறிப்புகளுக்கு நீங்கள் எந்த செலவும் செய்ய தேவை இல்லை. நீங்கள் அன்றாட செய்யும் வேலைகளையே சரியான முறையில் செய்தாலே உங்கள் முகம் மிகவும் அழகாக இருக்கும். சரி வாங்க முகத்தை பராமரிக்க தினமும் செய்ய வேண்டிய குறிப்புகளை படித்து தெரிந்து கொள்ளலாம்.

Daily Face Care Tips in Tamil:

Dry Skin Care Routine in Tamil

டிப்ஸ்: 1

உங்கள் முகத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். தூங்குவதற்கு முன்பாகவும், தூங்கி எழுந்த பிறகும் சருமத்தை தூய நீரில் கழுவ வேண்டும்.

டிப்ஸ்: 2

  • Daily Skin Care Routine at Home in Tamil: முகத்தில் இரசாயனம் கலந்த கிரீம்களை தடவி இருந்தால் தூங்க செல்வதற்கு முன் அதனை நீக்கி விடுவது நல்லது. ஏனெனில் இரவு தூங்கும் போது தான் சருமத்தில் புதிய செல்கள் உருவாகும். மேக்கப் முகத்தில் இருந்தால் பருக்கள், கரும்புள்ளி போன்றவை ஏற்படும்.
  • முகத்தை கழுவும் போது சோப்பிற்கு பதிலாக Natural Face wash அதாவது தேன், ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது நல்லது. சோப் பயன்படுத்தினால் சரும வறட்சி உண்டாகலாம்.

இறந்த செல்களை நீக்க – Daily Skin Care Routine in Tamil:

Dry Skin Care Routine in Tamil

டிப்ஸ்: 3

  • Daily Skin Care Routine in Tamil: சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளிகொண்டு வருவதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும்.
  • பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஸ்க்ரப் செய்யவும். இந்த டிப்ஸை நீங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் முகம் எப்போதும் இளமையாக இருக்கும். வயது முதிர்வை தடுக்கலாம்.

சரும வறட்சி – Dry Skin Care Routine in Tamil:

Dry Skin Care Routine in Tamil

டிப்ஸ்: 4

  • After Facial Care Tips in Tamil: முகத்தை எப்போதும் வறட்சி அடையாமல் பார்த்து கொள்வது நல்லது. சரும வறட்சியை தடுப்பதற்கு 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் சரும வறட்சியை தடுக்கலாம்.

கருமை நீங்க – Summer Skin Care Tips in Tamil:

Summer Skin Care Tips in Tamil

டிப்ஸ்: 5

  • Skin Care Routine Tamil: கோடை காலத்தில் வெப்பத்தால் முக அழகு பாதிப்படையும். அதை தடுப்பதற்கு நீங்கள் Sunscreen பயன்படுத்தலாம். Sunscreen வேண்டாம் என்பவர்கள் வெளியில் செல்வதற்கு முன்பாகவும், சென்று விட்டு வந்ததற்கு பின்பும் வெள்ளரிக்காய் Face Pack, தக்காளி பேஸ் பேக் போன்றவற்றை உபயோகிக்கலாம்.

உதடு சிவப்பாக –  Winter Season Skin Care Tips in Tamil:

Winter Season Skin Care Tips in Tamil

டிப்ஸ்: 6

  • பனிக்காலத்தில் ஒரு சிலருக்கு உதட்டில் வறட்சி ஏற்படும், அதனை தடுப்பதற்கு உதட்டில் நீங்கள் தினசரி தேன் தடவி வரலாம். தேன் உதடு வறட்சியை தடுப்பதற்கு மட்டும் இன்றி உதட்டில் ஏற்படும் கருமையை நீக்கி இயற்கையாக சிவப்பாக வைத்து கொள்ள உதவும்.

முகத்தில் இருக்கும் ரோமங்களை அகற்ற – Daily Face Care Tips in Tamil:

best skin care tips in tamil

டிப்ஸ்: 7

  • முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்றுவதற்கு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி கொள்ளவும். பின் சுடு தண்ணியில் காட்டன் துணியை நினைத்து முகத்தை துடைக்கவும். இந்த முறையை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் ரோமங்களை எளிதில் நீக்கி விடலாம்.
  • ரோமங்களை அகற்றுவதற்கு மஞ்சள் பேஸ் பேக்கையும் பயன்படுத்தலாம்.

இயற்கையாக முகத்தை பராமரிக்க – Daily Face Care Tips in Tamil:

best skin care tips in tamil

டிப்ஸ்: 8

  • இயற்கையாக முகத்தை பராமரிக்க கடலை மாவு, பச்சை பயறு மாவு, கற்றாழை போன்றவற்றை பயன்படுத்தலாம். முகம் பொலிவு பெற தினசரி வெள்ளரிக்காய் ஜூஸ், கேரட் ஜூஸ், மாதுளை ஜூஸ் போன்றவற்றை குடிப்பது நல்லது.
  • முகம் நல்ல பிரகாசமாக இருக்க நல்ல தூக்கம், போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
முகம் பொலிவு பெற இயற்கை அழகு குறிப்புகள்

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement