வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

3 நாட்களில் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

Updated On: January 28, 2023 6:00 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Dark Spots Removal Home Remedies

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருந்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் முகத்தில் பருக்கள் வந்து அது நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி விடுகின்றது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய நிலையில் அனைவருக்குமே இந்த பிரச்சனை இருக்கிறது.

அதனால் பலரும் முகத்தில் பருக்கள் வராமலும், கரும்புள்ளிகள் மறைய வேண்டும் என்பதற்காகவும் கடைகளில் கிடைக்கும் இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் சருமத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த கரும்புள்ளிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Dark Spots Removal Home Remedies in Tamil: 

  1. கடலைமாவு – 2 டேபிள் ஸ்பூன்
  2. தேன் – 1 ஸ்பூன்
  3. கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு – சிறிதளவு

கடலை மாவு எடுத்து கொள்ளவும்:

கடலை மாவும் தேனும்

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

 முக அழகை மேம்படுத்துவதற்கு கடலை மாவு மிகவும் உதவுகிறது. கடலைமாவில் இருக்கும் பண்புகள் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை போக்கி முகத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது. இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்குகிறது. தேன் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.  
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் 2 நாட்களில் மறைய இதை தடவுங்கள்..!

கற்றாழை ஜெல் சேர்க்கவும்: 

கற்றாழை எலுமிச்சை சாறு

பின் அதில் 2 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ளவும்.

 கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் முகத்தை பளபளப்பாகவும், எண்ணெய் பசை இல்லாமலும் வைத்து கொள்ள உதவுகிறது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை மறைய செய்கிறது. எலுமிச்சை சாறில் அசிட்டிக் அமிலம் இருப்பதால் இது கரும்புள்ளிகளை மறைய செய்கிறது. கருவளையம் மற்றும் தழும்புகளை நீக்குகிறது.  

அப்ளை செய்யும் முறை:

அப்ளை செய்யும் முறை.!

இந்த பேஸ்டை முகத்தில் கண்கள் மற்றும் உதடுகளை தவிர முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். பின் இந்த பேஸ்ட் முகத்தில் 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். 20 நிமிடம் கழித்து முகத்தை ஒரு 3 லிருந்து 5 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக இருக்கும். ஒரு முறை இதை ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே..!

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை