இதை ஒரு முறை போடுங்க முகம் வெள்ளையாக பளிச்சென்று மாறிடும் சுருக்கம் இருக்காது..! Dead Skin Remover for Face at Home in Tamil..!
Dead Skin Remover for Face at Home in Tamil:- சரும துளைகளில் அடைத்துள்ள அழுக்குகளை நீக்க ஒரு சிறந்த வழிமுறை எதுவென்றால் அது பேசியல் என்று தான் சொல்ல முடியும். பொதுவாக நமது சருமமானது கோடைக்காலம் மற்றும் ஈரப்பதமான மழைக் காலத்தில், மிகவும் பிசுபிசுப்பாகவும், ஆரோக்கியமற்றதாகவும் காணப்படும். நாம் முகத்தை சாதாரண நீரால் கழுவுவதால், சருமத்தின் மேல் அடுக்கு வேண்டுமானால் சுத்தமாகுமே தவிர, சருமத்துளைகளின் உள்ளே உள்ள அழுக்குகள் வெளியேறாமல் அப்படியே தான் இருக்கும். எனவே தான் அடிக்கடி முகத்தை ஸ்கரப் பயன்படுத்தி சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
கடைகளில் பலவிதமான ஸ்கரப்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் கெமிக்கல்கள் அதிகம் நிறைந்துள்ளதால், அனைவரது சருமத்திற்கும் அது சரியாக இருக்கும் என்று கூற முடியாது. சிலருக்கு அந்த பொருட்கள் அழற்சியை உண்டாக்கலாம். எனவே எவ்வித அச்சமும் இல்லாமல் ஸ்கரப் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கு ஒரே வழி இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஸ்கரப் தயாரித்து பயன்படுத்துவது தான். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பளிச்சென்று பொலிவோடு காணப்படும். சருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ளை மஞ்சளை பயன்படுத்தி ஸ்கரப்பர் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
இதையும் படியுங்கள் –> | ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்..! |
Dead Skin Remover for Face at Home in Tamil..!
ஸ்கரப்பர்: 1
தேவையான பொருட்கள்:-
- தயிர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள் – இரண்டு ஸ்பூன்
- பாதாம் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- விட்டமின் எ மாத்திரை – ஒன்று
செய்முறை:-
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு சுத்தமான பவுலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்கரப்பர் தயார்.
பயன்படுத்தும் முறை:
தயார் செய்த இந்த மஞ்சள் ஸ்கரப்பை முகத்தை நன்றாக கழுவிய பின் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும், பிறகு இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்தபிறகு 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும், பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
பாருங்கள்:-
முகத்திற்கு வாரத்தில் இரண்டு முறை இந்த முறையை பின்பற்றி வர நல்ல பலன் கிடைக்கும். அதாவது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் அகன்று சருமம் பொலிவுடன் காணப்படும். முகத்திற்கு என்றும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. மேலும் முகம் என்றும் இளமையுடன் காணப்படும்.
ஸ்கரப்பர்: 2
தேவையான பொருட்கள்:-
- சர்க்கரை – ஒரு ஸ்பூன்
- ஆலிவ் ஆயில் – ஒரு ஸ்பூன்
- தேன் – ஒரு ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
செய்முறை:-
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்கரப்பர் தயார்.
பயன்படுத்தும் முறை:-
தயார் செய்த இந்த ஸ்கரப்பரை முகத்தில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் வரை காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
பயன்கள்:-
இந்த ஸ்கரப்பில் உள்ள எலுமிச்சை பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆலிவ் ஆயில் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும், தேன் சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள உதவுகிறது, சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. எனவே இந்த ஸ்கரப்பை வாரத்தில் ஒரு முறை செய்து வர சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
மேல் கூறப்பட்டுள்ள இரண்டு குறிப்புகளில் ஏதேனும் ஒரு டிப்ஸினை தொடர்ந்து பாலோ செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படியுங்கள் –> | ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |