உதடு வறட்சியா! கவலை வேண்டாம்!!! பனி காலத்தில் ஏற்படும் உதடு வறட்சியை குணமாக்கும் குறிப்புகள்:

Advertisement

Dry Lips in Winter Home Remedies in Tamil

வணக்கம் மக்களே!  முகத்திற்கு அழகே உதடுகள் தான். ஆனால் பனி காலம் வந்தாலே பெரும்பாலானோர்க்கு உதடு வறட்சி என்பது அதிகமாக இருக்கும். இதனால் முகத்தின் அழகு சற்று குறைந்தே போய்விடுகிறது. இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பாதிக்கப்படுகின்றனர். கவலைக்குள்ளாகின்றனர்.

இனி கவலையே வேண்டாம். அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்ற பல முறைகளை பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்துக்கொள்வோம்.உதடு வறட்சியை சரிசெய்ய வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருள்களே போதும். உதடு வறட்சியை சரி ஊசெய்யலாம். வீட்டில் உள்ள இயற்கை பொருள்களை கொண்டு உதட்டிற்க்கு ஸ்கரப் செய்வதன் மூலம் உதடு வறட்சியை குணப்படுத்தலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

புதினா இலை அழகு குறிப்புகள்:

pudina ilai benefits in tamil

  • உதடுகளுக்கு புத்துயிர் கொடுக்க புதினாவை பயன்படுத்தலாம். இதனால் உதடு மென்மை பெறுகிறது.
  • இதனை தயாரிக்க முதலில் புதினா இலைகளுடன் சிறுது நீர் சேர்த்து அரைத்து சாறாக எடுத்துக்ககொள்ள வேண்டும். பிறகு அந்த சாற்றை உதட்டில் தடவி ஸ்கரப் செய்து வந்தால் உதட்டின் வறட்சிதன்மை நீங்கி உதடுகள் மென்மையாக மாறுகிறது.

Dry Lips Honey Treatment in Tamil:

Dry Lips Honey Treatment in Tamil:தேனில் ஈரப்பதம் மூட்டும் மூலப்பொருள் இருப்பதால் உதட்டை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள தேனை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

தேன் – 1 டீஸ்புன்
சர்க்கரை – 2 டீஸ்புன்

இவற்றை சேர்த்து கலந்து உதட்டில் தடவி ஸ்கரப் செய்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் உதடு வறட்சி காணாமல்போகும்.

இயற்கை முறையில் லிம்பாம் அதுவும் பீட்ரூட் வைத்து. பயன்படுத்தி பாருங்கள் உங்கள் உதடு தான என்று ஒரு கேள்வி வந்துவிடும்..!

Coconut Oil for Dark Lips in Tamil:

coconut oil for dark lips in tamilதேங்காய் எண்ணெய் ஸ்கரப் தயாரிக்கும் முறை :

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
தேங்காய் சர்க்கரை – 1/4 டீஸ்பூன்
வெண்ணிலா பீன் பவுடர்- 1 சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்

இவற்றை சேர்த்து நன்றாக கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீக்கம் அடைந்து உதடுகள் மென்மையாகவும் அழகாகவும் மாறும்.

சோற்று கற்றாழை அழகு குறிப்புகள்:

  • கற்றாழை பல விதமான நோய்களுக்கு இயற்க்கை மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது.
  • இயற்கையாக கிடைக்கும் கற்றாழை ஜெல் அல்லது கடைகளில் கிடைக்கும் ஜெல் வடிவில் உள்ள கற்றாழை ஜெல்லை கூட உதட்டிற்க்கு தடவி வரலாம்.
  • நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட பயன்படுத்தலாம். இதனால் உதடு ஈரப்பதமாகவும் மென்மையாகவும் காட்சியளிக்கும்.

சிவப்பான உதடு பெற இதை செய்தால் மட்டும் போதும்!!!

இலவங்கப்பட்டை அழகு குறிப்புகள்:

lavanga pattai benefits in tamil

இலவங்கப்பட்டை உதட்டிற்க்கு பொலிவை கொடுக்கிறது. இதனால் உதடுகள் பொலிவு பெற்று காண்போருக்கு அழகுடன் தோற்றம் அளிக்கின்றன.

தேவையான பொருட்கள்:

இலவங்கப்பட்டையை முதலில் பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
இலவங்கப்பட்டை பொடி  – 1 டீஸ்பூன்
தேங்காய் சர்க்கரை – 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்

இவற்றை நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இதனை உதட்டிற்க்கு தடவி வருவதால் உதடுகளின் வறட்சிகள் நீங்கி அழகுற காணப்படும்.

Strawberry Benefits for Lips in Tamil:

strawberry benefits for lips in tamil

ஸ்ட்ராபெர்ரி பழத்தை கொண்டும் உதட்டிற்கு அழகு சேர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி பழம்  –  1
தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
தேன் – 1/2 தேக்கரண்டி

முதலில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை கரண்டி கொண்டு நன்கு பிசைந்து பேஸ்ட் வடிவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் தேங்காய் எண்ணெய், சர்க்கரை, தேன் இவற்றை சேர்த்து நன்கு கலந்து உதட்டில் தடவி வரவேண்டும்.

ஸ்ட்ராபெர்ரியில் சிட்ரிக் அமிலமும் வைட்டமின் சி-யும் இருப்பதால் உதடுகள் மிருதுவாகின்றன. உதட்டை சுற்றி உள்ள கருமைகளும் நீக்கப்படுகின்றன. இதனால் உதடுகள் பளிச்சென்று மாறுகின்றன.

கருப்பான உதடுகள் உள்ளதா? ஆண்கள் பெண்கள் இருவருமே இதை ட்ரை பண்ணுங்க!!!

Coffee Lip Scrub at Home in Tamil:

coffee lip scrub at home

பெரும்பாலானோர் இம்முறையை பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர்.

இம்முறையை தயாரிக்க தேவையான பொருட்கள்:

நன்கு பொடி செய்யப்பட்ட காஃபி தூள் – 1 டீஸ்பூன்
நன்கு பொடி செய்யப்பட்ட சர்க்கரை –  1 டீஸ்பூன்
தேன் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்

இவற்றை சேர்த்து நன்கு கலந்து உதட்டில் தடவி வருவதால் உதடுகள் அழகுகள்  பெற்று காண்பபோரை கவர்கின்றன.

Brown Sugar Lip Scrub Homemade in Tamil:

இந்த ஸ்க்ரப் தயாரிக்க  தேவையான பொருட்கள்:

பிரவுன் சுகர்(நாட்டுச்சர்க்கரை) – 1 டீஸ்பூன்
வெள்ளை சர்க்கரை – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

இவற்றை சேர்த்து நன்கு கலந்து உதட்டில் தடவி வருவதால் உதடுகளின் வறட்சி நீங்குவதோடு மட்டுமன்றி உதடு ஈரப்பதத்துடன்  பளபளப்பாக மாறும்.

இவ்வாறாக மேற்கண்ட ஸ்க்ரப் முறைகளை பயன்படுத்தி உதடு வறட்சியில் இருந்து தம்பிக்கலாம்.

ஸ்கரப் பற்றிய மிக முக்கியக்குறிப்புகள்:
1 ஸ்கரப் செய்யும்போது  வட்ட இயக்கத்தில்தான் செய்ய
வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று மறந்துவிடாதீர்கள்
2 உதட்டிற்கு ஸ்கரப் வாரத்தில் இரண்டு முறை மட்டுமே செய்ய வேண்டும். உதடு வறட்சி அதிகமாக இருந்தால் மட்டுமே இதன் அளவை அதிகபடுத்த வேண்டும் .
3 உதடுகளில் வெடிப்பு, இரத்தப்போக்கு , எரிச்சல், கொப்புளங்கள்
இருக்கும் போது ஸ்கரப் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement