முகம் வெள்ளையாக வீட்டிலே ஃபேஸ் மாஸ்க் எப்படி செய்வது..! Homemade Face Mask For Dry Skin..!
Natural Face Mask For Dry Skin: இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வீட்டிலே முக அழகை அதிகரிக்க ஃபேஸ் மாஸ்க் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பெண்கள் இப்போது கெமிக்கல் கலந்த கிரீம் வகைகளை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் முக சருமத்தில் பல விதமான பிரச்சனைகள் வருகிறது. அதை சரி செய்ய வீட்டிலே ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்..!
![]() |
ஃபேஸ் மாஸ்க் செய்ய – தேவையான பொருட்கள்:
- பேசன் பவுடர் – 2 ஸ்பூன்
- யோகர்ட் – 1 ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1/2 ஸ்பூன்
- தேன் – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- பப்பாளி சிறிய துண்டு – 1 (நன்றாக மசித்தது)
- காபி தூள் – 1/2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – சிறிதளவு
முகம் வெள்ளையாக ஃபேஸ் மாஸ்க் செய்முறை விளக்கம் 1:
முதலில் ஒரு பவுலில் பேசன் பவுடர் 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அடுத்து யோகர்ட் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும்.
வறண்ட சருமம் நீங்க ஃபேஸ் மாஸ்க் செய்முறை விளக்கம் 2:
அடுத்ததாக ஃபேஸ் மாஸ்க் செய்ய 1/2 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல், 1/2 ஸ்பூன் அளவிற்கு தேன் மற்றும் மஞ்சள் தூளை பேசன் பவுடரில் சேர்க்கவும். அடுத்து நன்றாக மசித்த பப்பாளியின் சிறிய துண்டை சேர்க்கவும்.
![]() |
முகம் பளிச்சென்று இருக்க ஃபேஸ் மாஸ்க் செய்முறை விளக்கம் 3:
மசித்த பப்பாளியை சேர்த்த பிறகு 1/2 ஸ்பூன் காபி பவுடரை சேர்த்துக்கொள்ளவும். அடுத்து ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக Hand Beater- ஆல் மிக்ஸ் செய்துக்கொள்ளவும். அவ்ளோதாங்க இந்த ஃபேஸ் மாஸ்க் ரெடி.
குறிப்பு:
இந்த ஃபேஸ் மாஸ்கை முகத்தில் மேலே இருந்து மசாஜ் போல் அப்ளை செய்யவேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்தில் தடவி வருவதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை சுத்தப்படுத்தும். ஃபேஸ் மாஸ்க் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவி கொள்ளலாம்.
முகத்தில் எப்போதும் எண்ணெய் பசை, வறண்ட சருமம் இருப்பவர்கள் யோகர்ட் பயன்படுத்தி வரலாம்.
இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்தில் இருக்கும் நிறமிகளை குறைக்கும் தன்மை வாய்ந்தது. அதோடு முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.
அடுத்து உடலில் இருக்கும் கொலாஜன்களை அதிகரிக்கும். முகத்தில் இருக்கும் எண்ணெய் சருமத்தை தடுக்கும். முகத்தில் இருக்கும் பருக்கள் இந்த ஃபேஸ் மாஸ்க் போடுவதால் நீங்கும்.
![]() |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |