Face Brightening Tips at Home in Tamil
பொதுவாக இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முரண்பாடான உணவு முறையின் காரணமாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அவர்களின் முகம் பொலிவிழந்து காணப்படுவது தான். அப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை ஜொலிக்க வைக்க நீங்களும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்திருக்குமா.? என்றால் உங்களில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதனால் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு உங்களின் முகத்தை நன்கு ஜொலிக்க வைப்பது என்பதற்கான சில குறிப்புகளை காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Face Whitening Tips at Home Naturally in Tamil:
இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு உங்களின் முகத்தை நன்கு ஜொலிக்க வைப்பது என்பதற்கான குறிப்பை பற்றி விரிவாக காணலாம்.
அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- ஆவாரம் பூ – 1 கைப்பிடி அளவு
- பச்சைப்பயிறு – 1 கைப்பிடி அளவு
- விரலி மஞ்சள் – 10 துண்டுகள்
- தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு ஆவாரம் பூ, 1 கைப்பிடி அளவு பச்சைப்பயிறு, மற்றும் 10 துண்டுகள் விரலி மஞ்சள் ஆகியவற்றை நன்கு வெயிலில் காய வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதிலிருந்து 1 டீஸ்பூன் பொடியை எடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை உங்களின் முகத்தில் இரவு உறங்க செல்வதற்கு முன்னால் தடவி காலை எழுந்த உடன் நன்கு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉ஆண்களின் முகம் நன்கு பொலிவு பெற இதை கூட பயன்படுத்தலாமா
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |