How to Glow Skin for Male Naturally in Tamil
பொதுவாக நமது முகம் நன்கு பொலிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் ஆசைப்படுவார்கள். அப்படி நமது முகமும் நன்கு பொலிவு பெறவேண்டும் என்று ஆசைப்படும் நபர்களுக்காக தான் இன்றைய பதிவு.
இன்றைய பதிவில் ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை போக்கி முகம் நன்கு பொலிவு பெற உதவிபுரியும் டிப்ஸினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே அது என்ன டிப்ஸ் அதனை எவ்வாறு மேற்கொள்வது போன்ற தகவல்களை இன்றைய பதிவில் காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
ஆண்கள் முகத்தில் கருமை நீங்க:
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் பல சரும பிரச்சனைகள் உள்ளது. அதில் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படுவது தான்.
அப்படி கருமையாக பொலிவிழந்து காணப்படும் முகத்தினை நன்கு பொலிவு பெற உதவிபுரியும் சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.
டிப்ஸ் – 1
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
- பால் – 2 டீஸ்பூன்
- தேன் – 2 டீஸ்பூன்
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து நாம் எடுத்துவைத்துள்ள 2 டீஸ்பூன் மஞ்சள்தூளினை சேர்த்து அது காபி கொட்டை நிறத்திற்கு மாறும் வரை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=>ஆண்களின் தலையில் முடி குறைந்து கொண்டே வருகிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதனுடன் 2 டீஸ்பூன் பால் மற்றும் 2 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனை உங்களின் முகத்தில் தடவி ஒரு 10 -15 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கருமை நீங்கி நீங்கள் நன்கு பொலிவுடன் காணப்படுவீர்கள்.
டிப்ஸ் – 2
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கடலைமாவு – 1 1/2 டீஸ்பூன்
- காபித்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
- பால் – 2 டீஸ்பூன்
- தேன் – 1 டீஸ்பூன்
இதையும் படித்துப்பாருங்கள்=>ஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..!
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் அல்லது சிறிய பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பிறகு அதனை உங்களின் முகத்தில் தடவி ஒரு 10 -15 நிமிடம் வைத்திருந்த பிறகு முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கருமை நீங்கி நீங்கள் நன்கு பொலிவுடன் காணப்படுவீர்கள்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |