முக சுருக்கம் இல்லாமல், முகத்தை பளபளப்பாக வைத்திருக்க தயிரை எப்படி பயன்படுத்துவது..?

Advertisement

முக சுருக்கம் போக | Face Pack for Glowing Skin Homemade 

சில நபர்களுக்கு இளம் வயதிலே முகத்தில் சுருக்கம் ஏற்படும். அது வயதான தோற்றத்தை கொடுக்கும். இதிலும் திருமண வயது வரும் போது தான் இந்த முக சுருக்கம் பிரச்சனையை நினைக்கின்றனர். இன்னும் சில நபர்கள் முகம் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். முக சுருக்கம் ஏற்பட்டவுடன் அதனை எப்படி தடுப்பது என்று யோசிக்காமல் வருவதற்கு முன்னாலே அதனை தடுப்பது நல்லது. இந்த பதிவில் உள்ள குறிப்புகளை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாகவும், இளமை தோற்றமாகவும் வைத்திருக்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

இளமையாக இருக்க வழிகள்:

Face Pack For Glowing Curd:

முக சுருக்கம் போக

ஒரு பவுலில் தயிர் எடுத்து கொள்ளவும், ஆரஞ்சு தோலை காய வைத்து அரைத்து, அந்த தூளை தயிரில் சேர்த்து கொள்ளவும். இந்த பேக்கை மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி கொள்ளவும். தயிர் வயதான தோற்றம் இல்லாமல் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

இன்னொரு பவுலில் தயிர், எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி கொள்ளலாம். இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் செய்தால் போதுமானது. தயிரில் லாக்டிக் அமிலம், கால்சியம், மினரல்ஸ் இருப்பதால் முகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எலுமிச்சை சாறில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. 

இதையும் படியுங்கள் ⇒ கேரளா பெண்கள் முகத்திற்கும், தலை முடிக்கும் இதை தான் பயன்படுத்துகிறார்கள்..!

அரிசி ஊறிய தண்ணீர்:

முக சுருக்கம் போக

பச்சரிசியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் ஊறவைத்த தண்ணீர் மற்றும் அரிசி இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரைத்த அரிசியை வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும். வடிக்கட்டிய தண்ணீரை ஒரு கொதி கொதிக்க விடவும். கொதித்த அரிசி தண்ணீரில் ரோஸ் வாட்டர், வைட்டமின் E கேப்ஸுல் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அரிசி தண்ணீர் முகத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும். இந்த பேக்கை 7 நாட்கள் அப்ளை செய்தாலே முகத்தை பளபளப்பாக வைத்திருக்கும். அதுவே நீங்கள் தொடர்ந்து அப்ளை செய்தால் எப்பொழுதும் இளமையாகவே இருப்பீர்கள்.

இதையும் படியுங்கள் ⇒ கற்றாழை போதும் நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை அப்ளை செய்யுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement