முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன? | Reason for Pimples on Face in Tamil..!

Advertisement

Reason for Pimples on Face in Tamil

ஆண், பெண் இருவருமே தன்  உடலின் முக்கிய அழகாக கருதுவது முக அழகை மட்டும் தான். மற்ற உடல் உறுப்புகளை காட்டிலும் முக அழகிற்கு தான் அதிக கவனமும் அதிக ஆர்வமும் காட்டுகின்றனர். முகப்பருக்கள் வந்துவிட்டாலே முகத்தின் அழகே போய்விடுகிறது. முக பருக்கள் ஆண், பெண் இருபாலரையுமே பாதிக்கின்றது. முக பருக்கள் வருவதை தடுக்க பல வழிகளை நாம் பின் பற்றி வருகிறோம். இருப்பினும் பருக்கள் முகத்தில் வந்துகொண்டேதான் இருக்கின்றது என்று பலர் கவலைப்படுகின்றனர். முதலில் பருக்கள் ஏன் வருகின்றன?, முக பருக்கள் வர காரணம் என்ன?, பருக்களை தடுக்கும் வழிமுறைகள்?  போன்ற கேள்விகளுக்கு முதலில் பதிலை தெரிந்துகொண்டால்  மட்டுமே பருக்களுக்கு நீங்கள் நிரந்தரமாக  முற்றுப்புள்ளி வைக்க முடியும். இப்பதிவில் பார்க்க இருப்பது பருக்கள் வர காரணம் என்ன? பருக்களை தடுக்கும் முறைகளை பற்றித்தான்! இப்பதிவை படித்து முகபருக்களுக்கு நிரந்தர தீர்வு காணுங்கள்!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

முகத்தில் பருக்கள் வர காரணம்:

how remove dust from face in tamil

  • உங்கள் முகத்தை தினசரி சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பது பருக்கள் வர முக்கிய காரணமாகும்.
  • உடலில் பித்தம் அதிகமாக இருப்பது.
  • உடலில் கழிவுகள் அதிகம் தேங்கி இருப்பது
  • அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலில் உஷ்ணம் அதிகமாகி பருக்கள் வருகின்றன.
  • முகத்தில் தூசுக்கள் படிவதால் பருக்கள் வருகின்றன.
  • எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரப்பதால் பருக்கள் வருகின்றன.
  • உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் இருப்பது
  • அதிகபடியான ஹார்மோன் சுரக்கும் போது அது தோலின் வழியே வெளியேற முற்படும்போது பருக்கள் வருகின்றன போன்ற பல காரணங்களால் பருக்கள் முகத்தில் வருகின்றன.

👉பன்னீர் ரோஸ் தரும் ரகசிய அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக..!

பருக்கள் வராமல் தடுப்பது எப்படி?

 pimples vara karanam in tamil

  • அடுத்தவர் பயன்படுத்திய சோப் மற்றும் டவல்களை பயன்படுத்தக்கூடாது.
  • பருக்களை கைகளினால் தொடவே கூடாது.
  • நகத்தினால் பருக்களை கிள்ளக்கூடாது. பருக்களை கிள்ளினால் பருக்கள் அதிக பரவ தொடங்கும்.
  • முக்கியமா தலையில் பொடுகு இல்லாமால் பார்த்துக்கொள்ள வேண்டும். பொடுகு இருந்தால் எளிதாக முகத்தில் பருக்கள் வந்துவிடும்.

👉முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க – அழகு குறிப்புகள் !!!

 why pimples coming on face in tamil

  • அதிக அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

face pimples remove tips tamil

  • உடலின் வெப்பத்தை குறைக்க வாரம் ஒரு முறை தலைக்கு நல்லெண்ணெய்  வைத்து குளிக்க வேண்டும். நல்லெண்ணையில் உச்சம் தலை, தொப்புள், கால் பெருவிரல் போன்ற இடங்களில் வைத்து மசாஜ் செய்த பின்னர் குளிக்க வேண்டும்.
  • மேலும் நீராகாரம், இளநீர், பழச்சாறு, மோர் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும். இவற்றை அடிக்கடி குடிப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது மற்றும்  உடலின் வெப்பத்தை குறைக்க உதவும்.

 why pimples coming on face in tamil

  • முகப்பருக்கள் உள்ளவர்கள் கொழுப்பு அடங்கிய உணவுகள், புளிப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • சின்ன வெங்காயத்துடன் மோரை கலந்து தினசரி மதியம் பருகி வரலாம்.
  • பிஞ்சு வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

👉👉👉இயற்கை அழகு குறிப்புகள் 1000!!!

டிப்ஸ் 1:

face maintance tips in tamil

குப்பைமேனி இலையுடன் பூசுமஞ்சளையம் அரைத்து முகத்தில் தேய்த்துவந்தால் பருக்கள் மறைய தொடங்கும்.

டிப்ஸ் 2:

சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பாசிப்பருப்பு போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் நலுங்கு மாவினை முகத்திற்க்கு தடவி கழுவி வருவதால் முகத்தில் உள்ள பருவின் வீரியம் குறைய தொடங்கும் பருவனாது கட்டுப்பாட்டிற்குள் வரும்.

டிப்ஸ் 3:

நுங்கு நீரை பருக்கள் உள்ள இடத்தில் தடவி வருவதனால் கூட பருக்களை கட்டுப்படுத்தலாம்.

டிப்ஸ் 4:

how remove dust from face in tamil

👉முகம் சுருக்கம் நீங்க சில எளிய அழகு குறிப்புகள் ..!

சந்தனைத்தை நன்றாக இழைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூசி வருவதனால் பருக்கள் காய தொடங்கி விரைவில் மறைய தொடங்கும்.

மேற்கூறிய தகவல்களை அனைத்தும் முகப்பருக்களில் இருந்து விடுபட உங்களுக்கு கட்டாயம்  உதவும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement