கேரளா பெண்களின் தலை முடி அதிசயம் இது தானா..?

fast hair growth tips in tamil

கேரளா பெண்கள் முடி வளர்ப்பது எப்படி? | Mudi Valara Enna Seiya Vendum

பெண்கள் என்றால் அனைவருமே அழகு தான். என்னதான் பெண்கள் அழகு என்றாலும் கேரளா பெண்களை பார்த்தால் மட்டும் பெண்களுக்கு பொறாமை என்று சொல்ல முடியாது அவர்களை பார்த்து ஒரு சில இடத்தில் யோசனைக்கு வருவது இவர்களின் முடி மட்டும் எப்படி? இவ்வளவு அழகாகவும் நீளமாகவும் இருக்கிறது என்பது தான். அப்படி என்ன தான் அவர்களின் முடியில் ரகசியம் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம்.! வாங்க அது என்ன என்பதை தெளிவாக காண்போம்..!

Fast Hair Growth Tips in Tamil:

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் – 1 மூடி
  2. செம்பருத்தி இலை – 1 கைப்பிடி
  3. செம்பருத்தி பூ – 1 கைப்பிடி
  4. கருவேப்பிலை – 1 கைப்பிடி
  5. கற்றாழை – 1

ஸ்டேப்: 1

 fast hair growth tips in tamil

முதலில் மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தேங்காய் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

 fast hair growth tips in tamil

பின்பு அதனுடன் கருவேப்பிலை, செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை சேர்க்வும்.

ஸ்டேப்: 3

அடுத்து அதனுடன் நாம் எடுத்துவைத்துள்ள கற்றாழையை தோல் இல்லாமல் நறுக்கி அதனுடைய ஜெல்லை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்⇒ முகம் 24 மணி நேரமும் பளபளப்பாக இருக்க இதை டிப்ஸை Follow பண்ணுங்க.!

ஸ்டேப்: 4

இப்போது அந்த ஜாரில் தேங்காய், கருவேப்பிலை, கற்றாழை. செம்பருத்தி பூ செம்பருத்தி இலை அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 5

இப்போது அரைத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனை ஒரு காட்டன் துணியை கொண்டு வடிகட்டிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 6

வடிகட்ட கஷ்டமாக இருக்கும். இதனை வடிகட்டினால் சுலபமாக தலையில் அப்ளை செய்ய முடியும். உங்களுக்கு அரைத்த பொருட்களை அப்ளை செய்வது பிடிக்கும் என்றால் அப்படியே தலையில் தடவிக்கொள்ளலாம்.

தடவிய பின் 5 நிமிடம் வேர்களில் படும்படி நன்றாக மஜாஜ் செய்ய வேண்டும் எப்படி செய்வதால் தலைமுடியின் வேர் வரை சென்று முடி வளர்ச்சிக்கு உதவும்.

இதனையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  வாரம் 1 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடியை அடர்த்தியாகவும் மற்றும் கருப்பாகவும் இருக்க செய்யும்..!

இதையும் படியுங்கள்⇒ கேரளா பெண்களின் சருமம் பளபளப்பாக இருப்பதற்கான ரகசியம்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil