வெந்தயம் ஒன்று போதும் முடி உதிர்வை தடுக்க..! Fenugreek Seeds Benefits For Hair..!

fenugreek seeds for hair growth benefits

முடி அடர்த்தியாக வளர வெந்தய இயற்கை டிப்ஸ்..! Fenugreek Seeds For Hair..!

Fenugreek Seeds For Hair In Tamil: பொதுநலம்.காம் பதிவில் வெந்தயம் வைத்து முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம். இப்போது ஆண், பெண் என இருபாலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இயல்பாகிவிட்டது. பெண்களுக்கு அழகு நீளமான கூந்தல் இருப்பதுதான். இப்போது கடைகளில் விற்கும் ஷாம்பூவை அதிகம் உபயோகிப்பதனால் கூட இந்த முடி உதிர்வு பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறது. செயற்கை முறை இல்லாமல் இயற்கையான வழியில் முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுவோம் வாங்க..!

newஒரு வாரம் மட்டும் இதை பண்ணுங்க முடி கொட்டுறத நிறுத்துங்க (Karunjeeragam for hair in tamil)

இயற்கை முறையில் முடி உதிர்வை தடுக்க(venthayam uses for hair in tamil) – தேவையான பொருட்கள்:

  1. வெந்தயம் – 10 ஸ்பூன் (ஊற வைத்தது)
  2. வைட்டமின் இ கேப்ஸுல் – 1
  3. விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன் 

முடி உதிர்வை தடுக்க(fenugreek intake for hair in tamil) செய்முறை விளக்கம் 1:

முதலில் ஒரு பவுலில் 10 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து 5 அல்லது 6 மணிநேரம்  நன்கு ஊறவைத்து கொள்ளவேண்டும். அடுத்து ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

முடி அடர்த்தியாக வளர (vendhayam benefits for hair in tamil) செய்முறை விளக்கம் 2:

மிக்ஸி ஜாரில் அரைத்ததை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். வடிகட்டி எடுத்து கொண்டதில் வைட்டமின் இ கேப்சுளை ஒன்று சேர்த்துக்கொள்ளவும். வைட்டமின் இ கேப்ஸுல் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெயை 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் சேர்க்கலாம்.

newஅடர்த்தியாக முடி வளர..! கூந்தல் பராமரிப்பு முறை..! Hair Growth Tips in Tamil..!

முடி கருமையாக வளர (fenugreek for hair in tamil) செய்முறை விளக்கம் 3:

அடுத்து 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும். குளிர்ச்சி தன்மை உள்ளவர்கள் இதை தவிர்த்து கொள்ளலாம். இப்போது சேர்ந்த எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இதை தனியாக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் அப்ளை செய்யவேண்டும்.

முக்கியமாக இரவு நேரத்தில் மட்டுமே இதை தடவ வேண்டும். காலையில் ஷாம்பு போட்டு தலையை வாஷ் செய்துகொள்ளலாம். இந்த முறையை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் போதும் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.

குறிப்பு:

வெந்தயம் கண், கழுத்து பகுதிக்கு மிகவும் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. அதோடு முடி உதிர்வு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். வெந்தயத்தில் நிக்கோடனிக் அமிலம், ப்ரோடீன் சத்துக்கள் அடங்கியுள்ளது.

வைட்டமின் இ கேப்சுலும் முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு சிறந்து விளங்குகிறது.

விளக்கெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

newமுடி அடர்த்தியாக வளர இயற்கை டிப்ஸ்..! Hair Growth Tips Home Remedies In Tamil..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!