முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறதா..? அப்போ வெங்காயம் மட்டும் போதும் உதிர்ந்த முடி அனைத்தும் வளர்ந்துவிடும்..!

Advertisement

Front Head Hair Growth Tips in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவு வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். பொதுவாக நம் அனைவருக்குமே தலைமுடி பிரச்சனை இருக்கும். இன்னும் சொல்லப்போனால் தலை முடியில் மட்டுமே பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை, நரைமுடி மற்றும் பேன் தொல்லை போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.

அதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துகின்றோம். அதனால் இன்று இல்லையென்றாலும் நாளடைவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இன்னும் சில நபர்களுக்கு முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறது என்ற கவலை இருக்கும். அவர்களுக்கு தான் இந்த பதிவு. அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.

வெங்காயத்தை எடுத்து கொள்ளவும்: 

வெங்காயத்தை எடுத்து கொள்ளவும்

முன் நெற்றியில் உதிர்ந்த முடி அனைத்தையும் திரும்ப வளர செய்யும் அற்புதமான பொருள் தான் சின்ன வெங்காயம். வெங்காயத்தில் பல ஆரோக்கியம் தரும் சத்துக்கள் இருக்கின்றன. அதனால் தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் வெங்காயம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

அதனால் உங்கள் முடிக்கு தேவையான அளவு சின்ன வெங்காயத்தை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதன் தோலை நீக்கி விட்டு கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு மிக்சி ஜாரில் வெங்காயத்தை போட்டு பேஸ்ட் போல நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு துணியில் வைத்து வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

உங்க முடி வெறித்தனமா வளர இந்த ஒரு பொடி மட்டும் போதும்

அப்ளை செய்யும் முறை:

அப்ளை செய்யும் முறை

இந்த வெங்காய சாறை நீங்கள் உங்கள் தலையில் நேரடியாகவே அப்ளை செய்யலாம். இல்லையென்றால் வெங்காய சாறுடன் 2 அல்லது 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த சாறை உங்கள் முடியின் வேர் பகுதியில் அப்ளை செய்து நன்றாக 5 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். இந்த சாறு உங்கள் தலையில் குறைந்தது 20 நிமிடம் அப்படியே இருக்கட்டும்.

உங்க முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை ஓரே இரவில் மாயமாய் மறைய செய்ய இந்த ஒரு பொருள் போதும்

பின் உங்கள் உங்கள் தலையை நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசி கொள்ளலாம்.

 இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முன் நெற்றியில் உதிர்ந்த முடி அனைத்தும் திரும்ப வளர்வதை நீங்களே காண்பீர்கள். மேலும் இது உங்கள் தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.  
அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement