Glowing Skin Naturally at Home | முகம் பளிச்சென்று இருக்க
பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்களாக இருந்தாலும் சரி மற்றவர்களை விட கொஞ்சம் அழகாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். சிலர் இத்தகைய எண்ணத்தினை அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் மற்ற சிலர் அதனை எப்படியாவது நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று உடனே பார்லருக்கு சென்று முகத்தை பளிச்சென்று மாற்ற முயற்சி செய்வார்கள். என்ன தான் இது மாதிரி நாம் பார்லருக்கு சென்று முகத்திற்கு என்ன என்னவோ செய்தாலும் கூட அதனுடைய பலன் நீண்ட நேரத்திற்கு நிலைத்து இருப்பது இல்லை. அதனால் இன்று ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை மட்டும் வைத்து முகத்தை பளிச்சென்று மாற்றுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
முகம் பளபளக்க:
முகம் பளபளப்பாக கீழே இரண்டு விதமான எளிமையான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு ஏற்றதாக இருக்கின்ற ஒன்றை மட்டும் பயன்படுத்தலாம்.
குறிப்பு- 1
கற்றாழை ஜெல் தலை முடிக்கு மட்டும் உகந்ததாக இல்லாமல் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி முகம் பளிச்சென்று மாற உதவுகிறது.
அதனால் ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து இரண்டினையும் நன்றாக 5 நிமிடம் கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தாங்க முகத்தினை பளபளப்பாக மாற்றக்கூடிய Face பேக் தயார்.
பயன்படுத்தும் முறை:
Face பேக் தயார் செய்த 5 நிமிடம் கழித்து Face பேக்கினை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவி விட வேண்டும். அதேபோல் இந்த Face பேக்கினை இரவு தூங்க செல்வதற்கு முன்பாக பயன்படுத்த வேண்டும்.
Beauty Tips👇👇 எலுமிச்சை சாறுடன் இதை மட்டும் கலந்து முகத்திற்கு போட்டால் போதும்.. முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறிவிடும்..
குறிப்பு- 2
மஞ்சளை நாம் நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலமாக முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் அனைத்தும் வெளியேற்றி முகத்தை பளிச்சென்றும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இல்லாமல் இருக்க செய்கிறது.
அதனால் முதலில் ஒரு பவுலில் 1 ஸ்பூன் தேன் மற்றும் 3/4 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்றாக கலந்து கொண்டால் போதும் முகத்தை பொலிவாக மாற்றக்கூடிய Face பேக் தயாராகிவிடும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு 5 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக துடைத்து விட்டு, பின்பு தயார் செய்து வைத்துள்ள Face பேக்கினை முகத்தில் 20 நிமிடம் வரை அப்ளை செய்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட வேண்டும்.
இவ்வாறு செய்தால் எப்படிப்பட்ட முகமும் பளிச்சென்று மாறுவதை நீங்களே பார்க்கலாம்.
Beauty Tips👇👇 கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |